Showing posts with label தலைவலிக்கு உடனடி தீர்வு! Instant solution for headache!. Show all posts
Showing posts with label தலைவலிக்கு உடனடி தீர்வு! Instant solution for headache!. Show all posts

Sunday, 17 May 2020

தலைவலிக்கு உடனடி தீர்வு! Instant solution for headache!

பொதுவாக தலை,கழுத்து, தலையின் மேற்பகுதி இவற்றில் ஏற்படும் வலி அல்லது சுகமின்மை தலை வலி எனப்படுகின்றது.பெரும்பாலான தலைவலிகளுக்கு ஆபத்தான கரணங்கள் இருபதில்லை. அன்றாட வழக்கை வழக்கத்தில் ஏறுபடுகின்ற சிறிய மாற்றங்களே இதற்கு காரணமாகும். உதாரணமாக;அதிக வேலையின் காரணமாக மன அழுத்தம், டென்ஷன், தேவையான தூக்கமின்மை, உணவு எடுத்துகொள்ளாமலிருத்தல், கணினி, அல்லது செல்போன் ஆகியவற்றை உபயோகப்படுத்தும் போது தலையை ஒரே நிலையில் வைத்திருத்தல், மது மற்றும் போதை பொருட்கள் தலைவலி வரும் வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. 

தலைவலி நான்கு வகையாக பிரிக்கபடுகின்றன;

1.டென்ஷன் தலைவலி : தலையின் இருப்பக்கங்களிலும் ஏற்படுகிறது.இது தலையின் பின்பகுதியில் ஆரம்பித்து, கழுத்து மற்றும் முன்பகுதிக்கு பரவுகிறது.

2.மைக்ரேன் தலைவலி : பார்வை தொந்தரவு மற்றும் குமட்டலுடன் ஏற்படும் தீவிரமான தலைவலியாகும். இது தலையின் ஒரு பக்கத்தில் தொடங்கி இருபக்கத்திலும் பரவலாம்.நடக்கும்போதும் மற்றும் இயக்கத்தின்போதும் வலி மோசமாகும். வெளிச்சம்,சப்தம் ,போன்றவற்றை மைக்ரேன் தலைவலி வந்தவர் தவிர்ப்பர். மாதவிலக்கு நேரங்களில் ஒற்றைத்தலைவலி வருவதற்கு வாய்ப்பு அதிகம்.

3.க்ளஸ்டர் தலைவலி : மிகவும் கடுமையானது.ஒரே நாளில் தொடர்ந்து பலமுறை வரக்கூடியவை. இது வாரங்கள் முதல் மாதங்கள் வரை நீடிக்கும்.

4.சைனஸ் தலைவலி : தலை மற்றும் முகத்தின் முன்பகுதியில் வருகிறது.இது கன்னம்,மூக்கு மற்றும் கன்னங்களின் பின்புறம் உள்ள சைனஸ் பாதையில் ஏற்படும் ஒவ்வாமையால் ஏற்படுகிறது. காலை நேரங்களில்  எப்பொழுதும் வலி மிக அதிகமாக இருக்கும்.


தலைவலி வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கும் வழிமுறைகள் :

1.தேவையான அளவு தூக்கம்

2.ஆரோகியமான உணவு

3.தினசரி உடற்பயிற்சி

4.கம்பூட்டர் உபயோகிக்கும் போது கழுத்து மற்றும் மேற் உடற்பகுதியை அவ்வப்பொழுது நீடிகொள்ளுதல்.

5.தியானம் ,மூச்சி பயற்சி ஆகியவற்றால் மன அழுத்தத்தைக் குறைத்தல்.




தீர்வு :

வலி பின்புறம் இருந்தால்....

                                                                          GB-20

வலி பக்கவாட்டில் இருந்தால்......
                                                                         TW-20                      
வலி முன்புறம் இருந்தால்.....
                                                                       TW-23



**இந்த புள்ளிகளில் 20 வினாடிகள் இலேசான அழுத்தம் கொடுக்கவும் , இன்ஷால்லாஹ் சரியாகிவிடும்.