Showing posts with label கொரோனாவுக்கு இஸ்லாம் கூறும் தீர்வு !. Show all posts
Showing posts with label கொரோனாவுக்கு இஸ்லாம் கூறும் தீர்வு !. Show all posts

Wednesday, 6 May 2020

கொரோனாவுக்கு இஸ்லாம் கூறும் தீர்வு !


                             கொரோனாவுக்கு இஸ்லாம் கூறும் தீர்வு !

சோதனை என்பது பெரும்பாலும் வறுமை, நோய், அழகின்மை, உடல் வலுவின்மை, குழந்தைப்பேறு இன்மை, வலிமையானவர்களின் அடக்குமுறைகளுக்கு ஆளாகுதல், தீர்க்க முடியாத கடன், பொருத்தமில்லாத வாழ்க்கைத்துணை, தறுதலைப் பிள்ளைகள், நெருக்கமானவர்களின் மரணம், உடல் ஊனம், நினைவாற்றல் குறைவு, சிந்தனைத் திறன் குறைவு, படிப்பறிவு இல்லாமை இப்படி ஆயிரமாயிரம் குறைகள் மனிதர்களுக்கு உள்ளன. 

மனிதன் இவ்வுலகில் எப்படி வாழ்கிறான் என்று சோதித்துப் பார்ப்பதற்காகவே மனிதனை அல்லாஹ் படைத்துள்ளான்.
(நம்பிக்கையாளர்களே) பயம், பசி மேலும் பொருள்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் ஆகியவைகளைக் கொண்டு நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே! இச்சோதனைகளால் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுங்கள். 2:155.
ஆக எப்படிப்பட்ட சோதனைகளாக இருந்தாலும் அது மனதை தான் பாதிக்கிறது. நாம் மனதில் தான் உணர்கிறோமே தவிர,மனதை விட்டு வெளிப்படையான உடலிலோ, பொருள்களிலோ ,வேதனையை காண்பதில்லை .உடலில் காயம் ஏற்பட்டால் அந்த காயத்தை பற்றி மனம் தான் பதட்டபடுகிறது.பொருள்களில் நஷ்டம் ஏற்படும் பொழுது அதை பற்றி மனம் தான் கவலைகுள்ளகிறது.



ஒரு நோய் ஏற்பட்டுவிட்டால் என்னவாகுமோ! என்று மனதில் ஏற்படுகின்ற பயம் தான் நோய்களை அதிகரிக்கின்றதே தவிர, அந்த பயம் மட்டும் இல்லை என்றால் நோய்கள் தீண்ட போவதில்லை .
உதரணமாக ...

அமெரிக்காவில் நாஷ்வில் என்ற ஊரில் இருந்த சாம் லாண்டி என்ற நபருக்கு உணவுக்குழாயில் புற்றுநோய் இருப்பதாக அவருடைய மருத்துவரால் கண்டறியப்பட்டது. புற்றுநோய் கடைசிக்கட்டத்தை எட்டி விட்டதாக மருத்துவப் பரிசோதனைகள் கூறின. சிகிச்சையளிக்க முடியாத நிலைக்கு புற்றுநோய் போய்விட்டதாகக் கூறிய அவருடைய டாக்டர்.மெடர் இன்னும் இரண்டு, மூன்று வாரங்களில் லாண்டி இறந்துபோய் விடுவார் என்றும் கூறினார். அதே போல இரண்டு வாரங்களில் சாம் லாண்டி மரணமடைந்தார். புற்றுநோய் முற்றிப்போய் சிகிச்சை பலனளிக்காத நிலையில் ஒரு நோயாளி மரணமடைவதில் என்ன புதுமை இருக்கிறது? இப்படி நோயாளிகள் இறப்பது வழக்கமான விஷயம்தானே என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் இங்குதான் விஷயமே இருக்கிறது. அப்படி மரணமடைந்த சாம் லாண்டியின் உடல் மருத்துவப் பரிசோதனைக்கு மறுபடியும் அனுப்பப்பட்டது. அவருடைய உணவுக்குழாயில் புற்றுநோய் இருந்த தடயங்களோ, புற்றுநோய்க் கூறுகளோ சிறிதளவும் இல்லை என்பது மரணத்திற்குப் பின்னால் வந்த மருத்துவப் பரிசோதனையின் முடிவு. அப்படியானால் லாண்டி எப்படி மரணமடைந்தார்?

அமெரிக்காவின் மரபணு ஆய்வாளர்.டாக்டர்.புரூஸ் லிப்டன் கூறுவதை கேளுங்கள். “புற்றுநோயே இல்லாத ஒரு நோயாளியை, அவருக்கு புற்றுநோய் இருப்பதாகவும், சில தினங்களில் இறந்துபோவார் என்றும் நம்ப வைத்தால் அந்த நோயாளி மரணமடைவது சாத்தியமே. ஏனென்றால் பயம் என்னும் உணர்ச்சி நல்ல ஆரோக்கியமாக உள்ள ஒருவரை மரணத்தை நோக்கித் தள்ளும் மிகப்பெரிய ஆயுதம்”

அப்புறம் என்ன? ஆரோக்கியமாக உள்ள நபரைச் சாகடிக்க விஷமா தேவைப் படுகிறது? ஒரு சிறிய பயமுறுத்தல் போதாதா? மனதில் பயத்தை விதைக்கும் ஒரு பொய் மறுபடி மறுபடி சொல்லப்பட்டால் அந்த பயமே உடல் முழுவதும் வியாபித்து, உயிரணுக்களைக் கொல்லுகிறது என்பது இன்றைய மரபணு அறிவியலின் தொடர்ச்சியாக டாக்டர்.புரூஸ் லிப்டனின் கண்டுபிடிப்புகளில் ஒன்று.

வெறுமனே ஒன்றிரண்டு மரணங்களையும், அதன் பரிசோதனை முடிவுகளையும் மட்டும் கொண்டு இந்த முடிவு எட்டப்படவில்லை. பல்வேறு வகையான பயன்பாட்டுச் சோதனைகளின் அடிப்படையில்தான் மரபணு அறிவியல் பயம் பற்றிய தன் கருத்தை முன்வைக்கிறது.

சீனா மற்றும் ஜப்பான் நாடுகளில் வருடத்தின் நான்காவது மாதம் மிகவும் மோசமானது, அது தீய சக்தியுடையது என்று காலங்காலமாக நம்பப்பட்டு வருகிறது. இந்த நம்பிக்கை ஏற்படுத்தும் பயத்தை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்காவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்காவில் வாழும் சீனர்கள் மற்றும் ஜப்பானியர்களின் மரணம் வருடத்தின் நான்காம் மாதமான ஏப்ரல் மாதத்தில் அதிகம் நிகழ்வது கண்டறியப்பட்டது. இது ஒரு வருடத்தில் இருக்கும் பிற மாதங்களில் நிகழும் மரணங்களை விட மிக அதிகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தங்கள் சொந்த நாடுகளில், சொந்த சூழ்நிலையில் ஏற்படுத்தப்பட்ட ஒரு நம்பிக்கை வேறு நாட்டில், வேறு சூழலில் வாழும் போதும் எவ்வளவு ஆழமான விளைவைத் தருகிறது என்பதை இந்த ஆய்வுகள் நிரூபித்தன.

மனிதனை வெறும் உடலாக, ஒரு பொருளாகப் பார்க்க முடியாது. அவன் உடலும், அதனோடு பின்னிப்பிணைந்த மனமும் கொண்டவன். மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் குணமாதல் என்பது வெறும் உடலோடு தொடர்புடைய மாற்றம் மட்டுமல்ல. மாறாக அது மனதோடு இணைந்த மாபெரும் விளைவாகும். நோய் என்பதை உடல் சார்ந்த காரணங்களைக் கொண்டு விளக்கிவிட முடியும். ஆனால் அது முழுமையான காரணமாகவோ அல்லது உண்மையான காரணமாகவோ இருக்காது.



உளவியல் மருத்துவம் இன்றைக்கு உலகமெங்கும் வேரூன்றியுள்ள நோய்களுக்கான அடிப்படைக் காரணம் என்று எதைக் குறிப்பிடுகிறது தெரியுமா நண்பர்களே? Psycho Somatic Disorder. அதாவது மனதில் ஏற்படும் ஆழமான விளைவுதான் உடலில் நோய்களாகப் பிரதிபலிக்கின்றன என்று கூறுகிறது.

நம்முடைய உடல் மூன்று விதமான அடுக்குகளில் இயங்குகிறது. ஒன்று – வெளிப்படையான உடலியல் மாறுபாடுகள் (Physical Changes). இரண்டு – வேதியியல் மாறுபாடுகள் (Chemical Changes). மூன்று – மனநிலை அல்லது சக்தி மாறுபாடுகள்(Psychological or Energy Changes). உடலியல் மாறுபாடுகள்தான் நம்மை தொந்தரவு செய்யும் நோய்கள் என்று விளக்க வேண்டிய அவசியமில்லை. உடலில் ஏற்படும் விதம் விதமான தொந்தரவுகளைத்தான் நாம் நோய் என்று அழைக்கிறோம். இந்த உடலியல் ரீதியான விளைவுகளுக்கான அடிப்படை உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றங்கள் தான்.

இதைப் புரிந்து கொள்வதற்கு நம் பள்ளிகளில் அறிவியல் பாடத்தில் காட்டப்பட்டுள்ள ஒரு உதாரணத்தையே நாம் நினைவு கூறலாம். ஒரு நாய் நம்மை துரத்துகிறது. இப்போது நாம் தப்பித்து ஓடுவதற்கோ அல்லது அதனை எதிர் கொள்வதற்கோ உடல் ரீதியான ஒரு பலம் நமக்குத் தேவைப்படுகிறது. அந்த பலத்தை உடல் நமக்கு வழங்குகிறது. இதுதான் உடலியல் மாற்றம். இந்த உடலியல் மாற்றம் எப்படி ஏற்பட்டது என்று ஆய்வு செய்தோமானால் அது வேதியியல் மாற்றங்களால் ஏற்பட்டது என்பதை கண்டுபிடிக்க முடியும். உடலிற்கு தேவைப்பட்ட பலத்தை வழங்குவதற்காக இந்த உடல் தனக்குள் வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்கிறது. நாய் துரத்தும் போது ஏற்படும் ரத்த அழுத்தம், ஓடுவதற்கான சக்தி இவைகள் உடலியல் விளைவுகள். இதற்கு அடிப்படையாக அமைவது அட்ரினல் என்ற வேதியியல் பொருளின் சுரப்புதான். இந்த ஹார்மோன் சுரப்பு ஏற்பட்ட பிறகுதான் ரத்தத்தின் அழுத்தமும், வேகமும் அதிகரித்து உடலுக்கு சக்தி கிடைக்கிறது. (நல்ல வேளை அப்படி ஓடும் போது யாராவது ஒரு மருத்துவர் ரத்த அழுத்த மானியை நம் கைகளில் கட்டியிருந்தால் நம்மை பி.பி. பேஷண்ட் ஆக்கியிருப்பார்). இப்படி உடல் தனக்குத் தேவையான போதெல்லாம் சுய வேதியியல் மாற்றங்களால் நிலைமையைச் சமாளிக்கிறது.

 இப்படி உடலியல் மாற்றங்களுக்கான காரணமாக வேதியியல் மாற்றங்கள் விளங்குகின்றன. இந்த வேதியியல் மாற்றங்கள் எப்படி ஏற்படுகின்றன? அதுதான் மூன்றாவது அடுக்காக இயங்கும் மனநிலை மாற்றம். அந்தக் குறிப்பிட்ட சூழலில் நாம் உணரும் பயமும், எச்சரிக்கை உணர்வும் மனநிலை மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இந்த மனநிலை மாற்றமே வேதியியல் மாற்றங்களின் அடிப்படைக் காரணமாக இருக்கிறது. பின்பு அது உடலியல் மாற்றமாக வெளிப்படுகிறது. இதுதான் மனித உடலியக்கத்தின் மூன்றடுக்கு இயக்கம். 

உலகின் எல்லா மருத்துவங்களுமே உடல், மனம் சார்ந்ததாகத்தான் ஒரு காலத்தில் இயங்கின. உடலும், மனதும் பிரிக்க முடியாதவை என்ற ஒருங்கிணைந்த (Holistic) கோட்பாடுகளைத்தான் மரபுவழி மருத்துவங்கள் முன்வைக்கின்றன.

 இன்றைய மருத்துவ ஆய்வுகளை உலகில் அதிகமாக மேற்கொள்வது அரசாங்கங்கள் இல்லை. மருந்துக் கம்பெனிகள்தான். விஞ்ஞானிகளை கூட்டம் கூட்டமாக வைத்து மருந்து உற்பத்தியை பெருக்குவதற்கு ஆய்வு செய்வார்களா அல்லது சொந்தக்காசில் சூனியம் வைத்துக் கொள்வார்களா? இப்படி நோய்களுக்கான உண்மையான காரணங்களைத் தேடும் கடமை எதுவும் கம்பெனிகளுக்கு இருக்கிறதா என்ன? மிகச் சமீபத்தில் வெளிவந்த புள்ளிவிபரம் ஒன்று கூறுகிறது “ அமெரிக்காவில் உள்ள ஒரே ஒரு மருந்துக்கம்பெனியின் வருட வருமானம் அமெரிக்க அரசின் வருட வருமானத்தை விடவும் அதிகம்” என்று. எப்படியான ஆய்வுகளைச் செய்தால் இப்படி அரசுகளோடு போட்டி போட முடியும்? 


நம்மைச் சுற்றி இயங்கும் பெரும்பாலான விஷயங்கள் நம்மை பயமுறுத்தி பணம் பறிப்பவைகளாகவே இருக்கின்றன. வாழ்நாள் முழுவதும் உழைத்துச்சேர்த்த பணம் போனாலும் பரவாயில்லை. மறுபடியும் எழ முடியாத அளவிற்கு உடல்நலம் பாதாளத்தில் தள்ளப்படுகிறது. சோப்பு. சீப்பு விளம்பரம் முதல் மருத்துவ ஆலோசனைகள், முழு ஆரோக்கிய உடல் பரிசோதனைகள், செய்திகள் என அனைத்துமே திட்டமிட்டு செய்யப்படுகின்றன. முந்தைய மருத்துவங்களில் உடல்நலத்திற்கான உளவியல்தான் இருந்தது. இன்றோ நோய்களைப் பெருக்குவதற்கான உளவியல் கூறுகள் நம்மை நோக்கி பயன்படுத்தப்படுகிறது. 

நம்முடைய உடல்நலத்தை வெளியே பரப்பப்படும் செய்திகளின் மூலம் சந்தேகிக்க வேண்டியதில்லை. அந்த சந்தேகமே நம்மை நாம் பயந்த நோயை நோக்கித் தள்ளும் வேலையைத் திறம்படச் செய்கிறது. ஒவ்வொரு உடல்நலம் குறித்த விஷயத்தையும் உளவியல் விளைவுகளின் அடிப்படையில் பிரித்துணர முயற்சிப்போம். இந்தச் செய்தி நம்மை பயமுறுத்துகிறதா? அல்லது விழிப்புணர்வை ஏற்படுத்துகிறதா? என்பதை கூர்மையாகக் கவனிக்க வேண்டிய தேவை இன்று தோன்றியிருக்கிறது. அவ்வாறு நாம் பயப்படுவதால் யாருக்கு நன்மை என்ற பொருளாதார அடிப்படையிலான கேள்வியும் உங்களை நோயிலிருந்து காப்பாற்றும். 

இப்பொழுது கொரோனா ஜுரம் என்று சொன்ன மாத்திரத்திலேயே மனம் துக்கங்களுகுள்ளாகி மரணத்தை எதிர் நோக்கின்ற அளவுக்கு நம் மனதை தயார் படுத்துவிட்டார்கள். இவர்களை எப்படி நாம் மருத்துவர்கள் என்று ஏற்று கொள்வது ? இவர்கள் கூறும் அனைத்து ஜுரதிர்கும் ஒரே அறிகுறிகள்தாம் .முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது. 

காய்ச்சல் என்பது நோயல்ல, மருத்துவம் ,உள்ளிருக்கும் நோயை தெரிவிக்கும் ஒரு அறிகுறி என்ற காலம் போக இன்று காய்ச்சலே விதம் விதமாக பெரும் நோய்களாக, கொள்ளை நோய்களாக பரவி வருகிறது!


பன்றிக்காய்ச்சல்,
பறவைக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல், சிக்குன் குன்யா, சார்ஸ்... இப்போது கொரோனா ! இப்படி ஒவ்வொருவிதமான பெயர் தாங்கிய நோய்களைப் பற்றி பீதியை கிளப்பு வதும், அதன் மூலம் பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள் கொள்ளையடிப்பதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலக சுகாதார அமைப்பு மற்றும் அரசாங்கங் களின் தெளிவற்ற நடவடிக்கைகள் மக்களை மேலும் பயமுறுத்துவதாக உள்ளது. 

கொரோனா வைரஸ் பற்றிய ஆய்வுகளின் முடிவுகளும், நடைமுறையும் குழப்பமான வையாக உள்ளன.
 வைரஸ் என்பது உலகிலேயே மிகவும் நுண்ணிய உயிர் என்று ஆங்கில மருத்து வம் கூறுகிறது. இது துணி, முகமூடி போன்றவற்றின் நுண்துளைகளை விடச் சிறியது. இந்நிலையில் கொரோனா தடுப்பிற்காக எந்தவித பயனுமற்ற முகமூடி களை சந்தையில் உலவவிட்டது யார்?

லக அளவில் பீதியை ஏற்படத்திய இந்த நோய்க்கு காரணமான கொரோனா வைரஸ் காற்றில் பரவுவதாகக் கூறப்படுகிறது. அப்படி காற்றில் அதி வேகமாகப் பரவும் வைரஸ் ஒரு குடும்பத் தில் ஒரு நபரை மட்டும் தாக்குகிறது. ஒரு ஊரில் 5, 10 பேர்களை மட்டும் தாக்கு கிறது. இன்னும், ஏழைகள் ,சாலை ஓரங்களில் வசிக்கும் மக்கள் ,மற்றும் அகதி முகாம்க ளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இலட்சகணக்கான மக்கள் சுகாதார வசதியற்றவர்களிடம் ஏன் பரவவில்லை? காய்ச்சல் பற்றிய பீதியும், மருந்து வியாபாரமும் மட்டுமே பரவுகிறது.

 அவ்வப்போது ஏற்படும் பறவைக்காய்ச்சல், டெங்குக்காய்ச்சல், சிக்குன் குன்யா, சார்ஸ் போன்றவற்றிற்கு காரணமாக கூறப்படும் கிருமிகள் எங்கிருந்து வரு கின்றன என்பதும், குறிப்பிட்ட காலத்திற்குப்பின் எங்கு செல்கின்றன என்பதும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
காய்ச்சல் என்பது உடலில் ஏற்பட்டிருக்கும் நோய்க்கூறுகளை உடலே வெளியேற்றும் முயற்சியாகும். உடலின் எதிர்ப்பு சக்திக் கும் - நோய்க்கூறுகளுக்குமான போராட்டம் தான் வெப்பமாக வெளிப்படுகிறது. கொரோனா காய்ச்சல் என்பதும் நோய்க்கெதிரான உட லின் போராட்டம்தான். உடலிற்கு துணை செய்யும்படியான இயற்கையான சிகிச்சை முறைகளை அரசுகள் பரிந்துரைப்பதுதான் மக்களையும், பொருளாதாரத்தையும் காக்கும் ஒரே வழி! ரசாயனத் தடுப்பு மருந்துகளின் பின்னால் ஓடுவது பன்னாட்டுக்கம்பெனிகளை ஊக்குவிப்பதற்கும், பொருளாதார சீரழிவிற்கும் வழிவகுக்கும்!

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பற்றிய அச்சமும் பீதியும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. மனிதன் என்ற வகையில் இவ்வாறான கொடிய நோய்களைக் கண்டு ஒருவர் அஞ்சுவதும் அவற்றிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள, முடியுமான முயற்சிகளில் ஈடுபடுவதும் இயல்பான விடயமே. எனினும் இது பற்றிய இஸ்லாத்தின் பரந்த பார்வை அவருக்கு வழங்கப்படுமாயின் ஓரளவு அவர் மனதளவில் தன்னைத் தானே வலுப்படுத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்.
ஈமானின் உறுதிக்குப்பிறகு மனிதனுக்குக் கொடுக்கப்படுகின்ற மிக உன்னதமான ஓர் அருள் தான் இந்த ஆரோக்கியம். “ஒருதடவை நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்த மேடை மீது ஏறினார்கள்; பிறகு அழுதார்கள்; பின்பு, ‘இறைவனிடம் மன்னிப்பையும், உடல் ஆரோக்கியத்தையும் வேண்டிக்கொள்ளுங்கள்; ஏனென்றால், ஈமானின் உறுதிக்குப்பிறகு உடல் ஆரோக்கியத்தை விட சிறந்த செல்வம் எவருக்கும் கொடுக்கப்படவில்லை’ என நபி (ஸல்) கூறினார்கள்”. அறிவிப்பவர்: அபூ பக்ர் சித்தீக் (ரழி) நூல் : திர்மிதி:3558
ஆரோக்கியத்தைப் பாதுகாத்து நோயின்றி வாழ்வதற்கு இறைவன் மீது உறுதியான நம்பிக்கையும் பிரார்த்தனையும் எவ்வளவு முக்கியமோ அது போன்று தற்காப்பு முயற்சியில் ஈடுபடுவதும் மிக அவசியமாகும். அல்லாஹ் பார்த்துக்கொள்வான் என்று ஒரு போதும் இருந்து விடக்கூடாது. அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதேபோன்று துறை சார்ந்தவர்களின் மருத்துவ, சுகாதார வழிகாட்டல்களையும் கடைப்பிடித்து ஒழுக வேண்டும்.

பொதுவாக நோய்கள் யாவுமே ஒரு முஸ்லிமின் பாவங்களை மன்னிக்கக் கூடியவைகளாகும்.

“ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் கஷ்டம், நோய், கவலை, நோவினை, துக்கம், அவனது காலில் குத்தி விடும் முள்ளின் வேதனை உட்பட அனைத்தின் மூலமும் அவனது பாவங்களை அல்லாஹ் அழித்து விடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி), நூல்: புகாரி 5641

சர்வதேச அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ள கொரோனா வைரஸ் போன்ற தொற்று நோய்கள் பற்றிய ஓர் இறை விசுவாசியின் பார்வை எப்படி இருக்க வேண்டும் என்பதனை பின்வரும் நபிமொழிகள் எமக்கு விளக்குகின்றன.

“உங்களுக்கு முந்திய சில சமூகங்களைத் தண்டிக்கவே கொள்ளை நோய்கள் அனுப்பப்பட்டன. அதில் எஞ்சிய சில (கொள்ளை நோய்களே) அவ்வப்போது ஆங்காங்கே வந்து செல்கின்றன. எனவே, ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதை ஒருவர் செவியுற்றால், அவர் அங்கு செல்ல வேண்டாம். மேலும், நீங்கள் வசிக்கும் ஊரில் கொள்ளை நோய் பரவி விட்டால், அதிலிருந்து தப்பிக்க நீங்கள் அங்கிருந்து வெளியேறவும் வேண்டாம்.” என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: உஸாமா (ரழி) நூல்: புகாரி 6974

கொள்ளை நோய் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நான் வினவினேன். அதற்கு அன்னார், “அது அல்லாஹ், தான் நாடியோர் மீது அனுப்பும் தண்டனையாகும். அதையே முஃமின்களுக்கு அருளாகவும் அல்லாஹ் ஆக்கி விட்டான். எனவே, கொள்ளை நோய் பரவியிருக்கும் ஓர் ஊரில் வாழும் ஒருவர், அதில் அல்லாஹ்வின் அருளை எதிர்பார்த்தவராகவும், அல்லாஹ் விதித்ததைத் தவிர வேறெதுவும் தன்னை அடையாது என்று நம்பிக்கை வைத்தவராகவும் பொறுமையோடு தனது ஊரிலேயே தங்கியிருந்து, (அதில் அவர் மரணிக்க) நேர்ந்தால், ஓர் உயிர்த் தியாகிக்குக் கிடைக்கும் நன்மை அவருக்குக் கிடைக்கும்.” என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி) நூல்: புகாரி 3474
மேலுள்ள நபி மொழிகள் கொள்ளை நோய்கள் பற்றிய இஸ்லாத்தின் பார்வையையும் அதனால் பீடிக்கப்பட்டவர்களின் நிலை குறித்தும் பேசுகிகின்றன. தற்காப்பு முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்கள் ஒரு வேளை இந்த நோயால் மரணித்துவிட்டால் கூட ஓர் உயிர்த் தியாகிக்குக் கிடைக்கும் நன்மை நிச்சயம் அவர்களுக்குக் கிடைக்கும் என்ற நன்மாராயத்தையும் இந்த இறை செய்திகள் எமக்கு சொல்கின்றன.

கொரோனா  மட்டுமல்ல எந்த நோய்யாக இருந்தாலும் அதிலிருந்து விடுபட  இஸ்லாம் கூறும் சில வழி முறை .....


சுத்தம் பேணுவீர், சுகாதாரம் பெறுவீர் சுத்தம் செய்வதை, சுத்தமாக இருப்பதை, சுற்றுச்சூழலை சுகாதாரமாக வைத்திருப்பதை இஸ்லாம் இறை நம்பிக்கையின் உடல் சார்ந்த ஒரு பகுதியாகவே பார்க்கிறது. இறைநம்பிக்கைக்கு அடுத்து இஸ்லாத்தில் இடம் பிடித்ததும், தடம் பிடித்ததும் சுத்தம்தான். இதையே இந்த நபிமொழியும் வலியுறுத்துகிறது.

சுத்தம் இறைநம்பிக்கையில் பாதியாகும் என நபி (ஸல்)கூறினார்கள் ( நூல்: முஸ்லிம் )

அதுமட்டுமல்ல தும்பல் மற்றும் எச்சில் துப்புவதின் ஒழுக்கத்தையும் பேணவேண்டும் .

*பசித்து சாப்பிடுவது

*கையை கழுவி சாப்பிடுவது

*அளவோடு சாப்பிடுவது

*சாப்பிட்ட பின் விரலை சூப்புவது போன்ற விஷயங்களை பின்பற்றலாம்..

இரவில் நன்றாக தூங்குவது .......



மேலும், உங்கள் உறக்கத்தை அமைதியளிக்கக் கூடியதாய் நாம் ஆக்கவில்லையா? 78:9


*நோய்களுக்கு பயப்படாமல் அல்லாஹுவுக்கு மட்டும் பயப்படுவது

*விதியை நம்புவது 




                                  
முக்கியமாக மீடியாக்கள் சொல்வதை நம்பாமல் இருப்பது மேலும் கிருமி தத்துவத்தை பற்றி ஆங்கில மருத்துவம் அடிபடைலியே முரண்பட்ட கருத்து கொண்டுள்ளவை அதாவது அணைத்து நோய்களும் கிருமிகளால் தான் ஏற்படுகின்றன vs நோய்களுக்கு கிருமிகள் காரணமல்ல .கிருமி தத்துவத்தை கண்டுபிடித்த லூயிஸ் பாஸ்டர் (1864)காலத்திலேயே ,டாக்டர் ஆண்டனி பீசாம்ப் அவர்களால் அது தவறு என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது .இப்படி முற்றிலும் பொய்யான அடித்தளத்தில் தான் ,ஆங்கில மருத்துவம் இன்று வரை செயல் பட்டு வருகிறது .உலக முழுவது இதே பொய் தான் பரப்பப்பட்டுள்ளது .கிருமிகள் மூலம் நோய் பரவுவது உணமையனால், காற்று ,நீர் என்று அணைத்து வழிகளிலும் பரவி ,இன்று உலகம் இல்லாமல் போயிருக்கும் .