உண்மையில் காய்ச்சல் என்பது ஒரு நோய் அல்ல; அது உடலின் ஏற்பட்டிருக்கின்ற நோய்களுக்கான அலெர்ட் அறிகுறிகள். உடலில் கழிவுகள் வெளி ஏறாமல் அல்லது கிருமித் தொற்று ஏற்படும்போது, அதை எதிர்த்துப் போராடும் உடல் எதிர்ப்புச் சக்தியின் போராட்டமே காய்ச்சல் எனப்படும். இந்த போராட்டத்தின் தன்மையைப் பொறுத்து உடலின் வெப்பம் அதிகரிக்கும். அதாவது சராசரியாக ஒரு மனிதனின் உடல் வெப்பநிலை 98.4°F (37°C) என்று இருக்க வேண்டும். அதற்கு மேல் வெப்பம் அதிகரிப்பதைக் காய்ச்சல், ஜுரம் என்கிறோம். காய்ச்சல் வந்தாலே;அது என்ன என்பதைச் சிந்திக்காமல் நாம் பதற்றப்படுகிறோம், புலம்புகிறோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “காய்ச்சலை ஏசாதே! ஏனெனில் அது, கொல்லனின் உலை இரும்பின் துருவை அகற்றிவிடுவதைப் போன்று, ஆதமின் மக்களின் (மனிதர்களின்) தவறுகளை அகற்றி விடுகிறது” என்று கூறினார்கள்.
(நூல்:ஸஹீஹ் முஸ்லிம் 5031.)
அதாவது நெருப்பு இரும்பை சுத்தப்படுத்துவதுபோல்; உடலில் ஏற்பட்டு இருக்கின்ற இந்த வெப்பம் உடலையும் மனதையும் துயிமைபடுத்தும்.அதுமட்டுமல்ல, காய்ச்சல் வந்தால் நாம் பொறுமையோடு இருக்க வேண்டும் என்றும் மார்க்கம் நமக்கு வழி காட்டுகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது எவரொருவருக்கு ஓர் இரவு காய்ச்சல் வந்து, அவர் அதைப் பொறுமையுடன் இருந்து அந்தக் காய்ச்சலிலும் அவர் தன் இறைவனுடன் திருப்தி கொண்டவராக இருந்தாரென்றால், பிறந்த பாலகனைப் போன்று தன் பாவங்களை விட்டும் பரிசுத்தமாகி விடுகிறார்” (நூல்: தர்ஙீப்)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்று அவர்களை என் கையால் தொட்டு, “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்படுகிறீர்களே!” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம்; உங்களில் இருவர் காய்ச்சலால் அடையும் துன்பத்தைப் போன்று நான் (ஒருவனே) அடைகிறேன்” என்று சொன்னார்கள். நான், “(இந்தத் துன்பத்தின் மூலம்) தங்களுக்கு இரு (மடங்கு) நன்மைகள் கிடைக்கும் என்பதா இதற்குக் காரணம்?” என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஆம்’ என்று கூறிவிட்டுப் பிறகு, “ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும், அது அல்லாத வேறு துன்பமாயினும் (அதற்கு ஈடாக), மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் விடுவதில்லை” என்று சொன்னார்கள். நூல் : (புகாரி 5660.)
ஆனால் நாம் என்ன செய்கிறோம் என்றால் பொறுமையைக் கடைப்பிடிக்காமல், மருத்துவரிடம் சென்று பல நோய்களை உருவாக்குகின்ற மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டுவிட்டு உடலுக்குத் துரோகம் செய்கிறோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பல நோய்களுக்கு மருந்து சொன்ன அவர்களே காய்ச்சல் வந்தபோது பொறுமையை மேற்கொண்டார்கள். ஆக நமக்குக் காய்ச்சல் ஏற்படும்போது உடலுக்கு ஓய்வு கொடுப்பதோடு பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும்.
காய்ச்சல் வந்தவர் கடைப்பிடிக்க வேண்டியவை :
1.பசி எடுக்கின்ற வரை எதையும் உட்கொள்ளக்கூடாது.நீங்கள் கவனித்திருப்பீர்கள் காய்ச்சல் இருக்கும்போது நாக்கு கசக்கும், எதையும் சாப்பிட பிடிக்காது.ஏனென்றால் உங்களுடைய ஜீரண சக்தியானது நோய் எதிர்ப்புச் சக்தியாக மாறி நோயை எதிர்த்துக் கொண்டு இருக்கின்றது.
1.பசி எடுக்கின்ற வரை எதையும் உட்கொள்ளக்கூடாது.நீங்கள் கவனித்திருப்பீர்கள் காய்ச்சல் இருக்கும்போது நாக்கு கசக்கும், எதையும் சாப்பிட பிடிக்காது.ஏனென்றால் உங்களுடைய ஜீரண சக்தியானது நோய் எதிர்ப்புச் சக்தியாக மாறி நோயை எதிர்த்துக் கொண்டு இருக்கின்றது.
2.தாகம் எடுத்தால், வெந்நீரை ஆறவைத்தோ, வெதுவெதுப்பாகவோ குடிக்கலாம். தாகம் இல்லாமல் ஒரு சொட்டு நீர் கூட குடிக்க வேண்டாம்.
3. காய்ச்சல் உயர்ந்து பின்னர் படிப்படியாக இறங்கும். அந்த நிலையில் பசிக்கும்போது, அரிசிக் கஞ்சி, இட்லி, இடியாப்பம் ஆகியவற்றை உட்கொள்ளலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் உடலின் தேவையைப் புரிந்துகொள்ளாமல் உணவை நாடாதீர்கள்.
4. மேற்கண்ட உணவுகள் தவிர வேறு எந்தவகை உணவையும் பானத்தையும் தவிர்ப்பது சிறந்தது. குறிப்பாக, பால் பொருட்களை நிறுத்திவிடுவது மிகவும் முக்கியமானது.
5. காய்ச்சலின் அளவு மிகவும் அதிகமானால், குளிர்ந்த நீரில் துணியை நனைத்து நெற்றியில் ஒத்தடம் தரவேண்டும். உடல் குளிரும் அளவுக்கு ஒத்தடம் தரக் கூடாது. அதிக வெப்பம் குறையும் அளவு தந்தால் போதும்.
6. முக்கியமாகத் தன்னை எந்த ஒரு வேலையிலும் ஈடுபடுத்தாமல் ஓய்வு எடுக்க வேண்டும்.
ஒரு வேலை உங்களுக்கு ஏதேனும் முக்கியமான வேலை இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழி முறைகளை பின்பற்றலாம், நீங்கள் அறிவீர்களானால் காய்ச்சல் தானாகவே சரியாகும் வரை உடலுக்கு ஓய்வு கொடுப்பதுதான் உங்களுக்குச் சிறந்ததாகும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காய்ச்சல் நரகத்தின் பெருமூச்சினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் தணித்துக் கொள்ளுங்கள்.நூல்:(புகாரி 3263.)
* குளிர்ந்த நீரை கொண்டு குளித்தால் காய்ச்சல் தணிந்து விடும்.
6. முக்கியமாகத் தன்னை எந்த ஒரு வேலையிலும் ஈடுபடுத்தாமல் ஓய்வு எடுக்க வேண்டும்.
ஒரு வேலை உங்களுக்கு ஏதேனும் முக்கியமான வேலை இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழி முறைகளை பின்பற்றலாம், நீங்கள் அறிவீர்களானால் காய்ச்சல் தானாகவே சரியாகும் வரை உடலுக்கு ஓய்வு கொடுப்பதுதான் உங்களுக்குச் சிறந்ததாகும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காய்ச்சல் நரகத்தின் பெருமூச்சினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் தணித்துக் கொள்ளுங்கள்.நூல்:(புகாரி 3263.)
* குளிர்ந்த நீரை கொண்டு குளித்தால் காய்ச்சல் தணிந்து விடும்.
* வாய் வழியாகக் காற்றை வேகமாக உள்ளே இழுத்தால் காய்ச்சலின் வெப்பம் குறையும்.
* அல்லது இந்த புள்ளியில் ஒரு நிமிடம் இலேசாக அழுத்திப் பிடித்தால் காய்ச்சல் சரியாகிவிடும்.