மலர் மருத்துவம்
ப்ளவர் ரெமடி :- 
     டாக்டர் எட்வர்ட் பாட்ச் என்பவர் இலண்டனில் பிறந்து M.B.B.S.; L.R.C.P., M.R.C.S. போன்ற பட்டங்களைப் பெற்று அலோபதி மருத்துவராகப் பேரும் புகழும் பெற்றார். ஆனால் மனநிறைவு கிட்டவில்லை. அலோபதி மருந்தினால் ஏற்படும் பக்க விளைவுகளும், நோய் முழுமையாகக் குணமாகாமல் திரும்பத் திரும்ப வருவதும் அவரைக் கவலைக்கு உள்ளாக்கியது. எனவே, ஹோமியோபதி கல்லூரியில் சேர்ந்து முறையாக பயின்று ஹோமியோபதி மருத்துவ பணியில் ஈடுபட்டார். இதிலுள்ள ஏராளமான மருந்துகளும் அவற்றின் வீரியங்களும் சிகிச்சை அளிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தியது. அதனால் வேறு எளிமையான மருத்துவ முறையைக் கண்டறிவதில் ஈடுபட்டார். எந்த நோய்க்கும் மனமே மூலகாரணம் என்றும் மனம் சீர்பட்டால் உடல் சீரடையும் எனக் கருதினார்.
காடுகளிலும் மலைகளிலும் சுற்றித் திரிந்து அங்குள்ள மலர்களையும் தலைகளையும் ஆராய்ந்து 37 மலர்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை உட்கொண்டு அவற்றின் சாரங்கள் அற்புதமாகச் செயலாற்றுவதைக் கண்டார். இத்துடன் ராக்வாட்டர் என்னும் பாறை கசிவு நீரையும் மருந்தாக்கி 38 மருந்துகளைப் பயன்படுத்தினார். மேலும் 5 மருந்துகளை 1 கூட்டு மருந்தாக ஆக்கி ரெஸ்க்யூ ரெமெடி எனப் பெயர் சூட்டி மொத்தம் 39 மருந்துகளை உலக நலனுக்காக வழங்கினார்.
இவர் மனித மன உணர்வுகளை ஏழு பிரிவாக பிரித்து அவர்களின் தன்மைக்கு ஏற்ப இம்மருந்துகளை இந்த ஏழு பிரிவுக்குள் அடக்கினார்.
எட்வர்டு பாட்சின் ஏழு வகை பிறப்பினர்
1. பயந்த சுபாவம் கொண்டவர்கள்(For those who have fear)1. ஆஸ்பென்
ii. செர்ரி ப்ளம்
iii. மிமுலஸ்
iv. ரெட் செஸ்ட்ந ட்
V. ராக் ரோஸ்
2. உறுதியற்ற தன்மை கொண்டவர்கள்(For those who suffer from uncertainty)i. ஸெராட்டோ
ii. ஜென்ஷ ன்
ii. கார்ஸ்
iv. ஹார்ன்பீ ம்
V. ஸ்க்ளராந்தஸ்
vi. வைல்டு ஓட்
3. வாழ்க்கைச் சூழலோடு பொருந்தாத தன்மை கொண்டவர்கள்(Not sufficient interest in present circumstances)i. செஸ்ட்நட்பட்V
ii. க்ளெமடிஸ்
iii. ஹனிஸக்கிள்
iv. மஸ்டர்டு
V. ஆலிவ்
vi. ஒயிட்செஸ்ட்நட்
vii. வைல்டு ரோஸ்
4. தனிமை விரும்பிகள்(Loneliness)i. ஹீதர்
ii. இம்பேஷன்ஸ்
iii. வாடர் வயலெட்
5. பிறர் நலத்தில் அதிக அக்கறை கொண்டவர்கள்
(Overcare for welfare of others)i. பீச்
ii. சிக்க ரி
iii. ராக் வாடர்
vi. வெர்வைன்
V. வைன்
6. அதிகமாக உணர்ச்சி வசப்படும் தன்மை கொண்டவர்கள்.
(Oversensitive to infuences and ideas)i. அக்ரிமனி
ii. ஸென்டாரி
iii. ஹால்லி
iv. வால்நட்
7. நம்பிக்கை இழந்து சோர்வுற்ற தன்மை கொண்டவர்கள்
(For despondency or despair)i. கிராப் ஆப்பிள்
ii. எல்ம் iii. லார்ச்
iv. ஓக்
V. பைன்
vi. ஸ்டார் ஆஃப் பெத்லெஹம்
vi. ஸ்வீட் செஸ்ட்நட்
viii. வில்லோ
மருந்து தயாரிக்கும் விதமும் அளவுகளும்:-
    மருந்து தயாரிக்கப் பயன்படும் மலர்களை சுத்திகரிக்கப்பட்டநீரில் போட்டு ஒரு பகல் முழுவதும்(8 மணிநேரம்) வெய்யிலில் வைத்திருக்க வேண்டும். மாலையில் மலர்களை எடுத்தெறிந்து விட்டு நீரை வடிகட்டி அதில் சமபாகம் சுத்த மதுசாரத்தை(ஆல்கஹால்) விட்டுக் கலக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இதுவே 'தாய்த்திரவம்' இதில் ஒரு பங்குக்கு 99 பங்கு சுத்த மது சாரத்தைவிட்டுக் குலுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் மருந்தாக உபயோகிக்க வேண்டும். இது மனதில் நன்றாக வேலை செய்கிறது, உடல் வியாதிகளையும் போக்குகிறது.
உட்கொள்ளும் அளவு, நேரம், விதம் : இப்படித் தயாரிக்கப்பட்ட மருந்தில் ஒரு துளியை சிறிது தண்ணீரில் கலக்கி ஒரு வேளை மருந்தாக சாப்பிடலாம். ஒரு நாளைக்குப் பல வேளைகள் மருந்து சாப்பிடவேண்டியிருப்பதால், ஒவ்வொரு வேளையும் இப்படித் தண்ணீரில் கலக்கி சாப்பிடுவது சிரமம். இதனால் மாத்திரைகளாக(Globules) உபயோகிப்பது சுலபம்.
ஹோமியோபதி கடைகளில் கிடைக்கும் சர்க்கரை உருண்டைகளை(Globals) வாங்கி அதில் இம் மருந்தினை நாலைந்து சொட்டுகள் ஊற்றி ஊற்றி குலுக்கி மாத்திரைகளாக பயன்படுத்தலாம்.
ஒரு வேளைக்கு
கடுகு அளவு மாத்திரைகள் என்றால் 6 to 8 மாத்திரைகள்.
மிளகு அளவு மாத்திரைகள் என்றால் 2 to 4 மாத்திரைகள். சாப்பிடலாம். சிறியவர்களுக்கு குழந்தைகளுக்கு இதில் பாதியளவு குடுத்தாலே போதுமானது!
இதில் பக்க விளைவுகள் இல்லை என்பதால் அளவுகளைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.
மலர் மருந்துகளின் தன்மையும் அதன் பயன்களும்
1. அக்ரிமோனி- Agrimony
"கவலை, கடுமையான வேதனை"
 வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் ஆழ்ந்த கவலை மற்றும் மன வேதனையை போக்கி மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிது. மது மற்றும் புகைப் பிடிக்கும் எண்ணம் தோன்றாமல் செய்கிறது.
1. பார்ப்பதற்கு மகிழ்ச்சியோடு இருப்பதாக காட்டிக் கொள்வார்கள் ஆனால் மனதிற்குள் வேதனை படுவார்கள்.
2. தனக்கு உள்ள நோயையும் மன வேதனையையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் நடிப்பார்கள்.
3. மற்றவர்களிடம் சகஜமாக பழகுவார்கள் எப்போதும் அமைதியாக இருப்பார்கள்.
4. தனிமையை விரும்பாதவர்கள்
6. வேடிக்கையாகவும் தமாசாக பேசும் குணம் படைத்தவர்கள்.
7.சண்டை சச்சரவுகளை விரும்பாதவர்கள்.
8. கவலைகளை போக்க புகைப்பிடித்தல் மது அருந்துதல் போன்ற தீய பழக்கத்திற்கு அடிமையாவார்கள்.
9. துன்பத்தை மறக்க கோமாளித் தனமாக நடந்துகொள்ளுதல்.
10.தனிமையில் இருக்க பயந்துகொண்டு யாருடனாவது இருக்க விரும்புதல்.
11.இளமையை விரும்புதல், எதிர்காலத்தை எண்ணி வருந்துதல்.
 ஹீதர் நபர்கள் தங்கள் கவலை துன்பங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வர் ஆனால் அக்ரிமோனி நபர்கள் தங்கள் கவலை துன்பங்களை யாரிடமும் கூறமாட்டார்கள்.
 
 
 
2. ஆஸ்பென் - Aspen
"காரணம் இல்லாத பயம்"
சிலருக்கு காரணமே தெரியாமல் அடிமனதில் ஒருவித பயம் இருந்துகொண்டே இருக்கும். அத்தகைய பயத்தைப் போக்கி மனதிற்குள் தைரியத்தை கொடுக்கும். கனவுத்தொல்லை, தூக்கமின்மையை போக்கும்.
1. காரணமே இல்லாமல் எப்போதும் ஒருவித பயத்துடனே இருப்பார்கள்.
2. இருட்டைக் கண்டு பயப்படுதல்.
3. இயற்கை சீற்றங்களை கண்டு பயப்படுதல்.
4. நடக்கக்கூடாதது ஏதாவது நடந்துவிடுமோ என்று பயப்படுதல்.
5. கெட்ட கனவைக் கண்டு பயப்படுதல்.
6. மரணத்தை கண்டு பயப்படுதல்.
7. இடி, மின்னலுக்கு பயப்படுதல்.
8. ஊசி போட்டுக்கொள்ள பயப்படுதல்.
9. விபத்து நடந்து விடுமோ என்ற பயம்,
10. இவர்கள் தாம் பயப்படுவதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள் தைரியமாக இருப்பதுபோல் காட்டிக் கொள்வார்கள்.
11. ஆஸ்பென் தெரியாத காரணங்களால் ஏற்படும் பயத்தை போக்கும். மிமுலஸ் தெரிந்த காரணங்களால் ஏற்படும் பயத்தை போக்கும்.
12. பயத்தால் அமைதியின்றி இருத்தல், செயல்களில் பின்வாங்குதல், நேருக்கு நேர் பார்த்து பேசுவதற்கு தயங்குதல்.
 மிமுலஸ் தெரிந்த காரணங்களால் ஏற்படும் பயத்தை போக்கும் ஆஸ்பென் தெரியாத காரணங்களால் ஏற்படும் பயத்தை போக்கும்.
 
 3. பீச் - Beech
"எல்லா விஷயங்களிலும் சட்ட ஒழுங்கை எதிர்பார்த்தல்"
   சிலர் எல்லாவற்றிலும் ஏதோ குறை கூறிக்கொண்டே இருப்பர். எதிலும் திருப்தி இருக்காது. அத்தகைய நபர்கள் பீச் எடுத்துக்கொண்டால் எல்லாவற்றிலும் ஒரு நிறைவையும், திருப்தியையம் காணும் மனநிலையில் ஏற்படும்.
 
1. எல்லா செயல்களிலும் ஒரு ஒழுக்கத்தை கடைபிடிப்பார்கள்.
2. எல்லோரும் நியாயமாகவும், நேர்மையாகவும், உண்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்பார்கள்.
3. நீதி நேர்மை தவறி நடந்துகொள்பவர்கள் மீது கடுமையாக கோபப் படுவார்கள். அவர்களைப் பற்றி எப்போதும் விமர்சனம் செய்துகொண்டே இருப்பார்கள்.
4. வீடு மற்றும் பணியிடங்களில் ஒரு அழகையும் ஒழுங்கையும் கடைபிடிப்பார்கள். அந்த அந்த பொருள் அந்த அந்த இடத்தில் இருக்கவேண்டும் என்று விரும்புவார்கள். மீறினால் கோபப்படுவார்கள். இதனால் நண்பர்கள் உறவினர்கள் இவர்களுக்கு குறைவாகவே இருக்கும்.
5. கடுமையான சொற்களை பிறயோகித்தல், துருவித்துருவி குற்றம் கண்டுபிடித்தால்.
6. தலைக்கனம், திமிர், தற்பெருமை கொள்ளுதல்.
7. உடுத்தும் உடை அணிகலன்கள் ஆகியவற்றில் ஒரு நேர்த்தியை எதிர்பார்ப்பார்கள்.
8. உறவினர்கள் நண்பர்கள் வீடுகளுக்கு சென்றால் அங்கே அலங்கோலமாக இருக்கும் பொருட்களை ஒழுங்கு படுத்துவார்கள் அவர்களுக்கு ஒழுங்கு பற்றி அறிவுரை கூறுவார்கள்.

4. சென்டாரி - Centuary
 
"கோழைத்தனம், அடிபணிந்து போதல்"
 இது மனதில் தோன்றும் கோழைத்தனமான எண்ணங்கள் மற்றும் மற்றவர்களுக்கு அடிமைபோல் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை போக்கி எல்லாச் செயல்களையும் தைரியமுடனும் வீரத்துடனும் ஈடுபடச் செய்யும்.
1. இவர்கள் மிகவும் கோழைத்தனமாகவும் அமைதியாகவும் இருப்பார்கள்.
2. யார் எந்த வேலை சொன்னாலும் தட்டாமல் செய்வார்கள்.
3. இவர்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு மற்றவர்கள் சொன்ன வேலைகளை செய்வதில் கருத்தாக இருப்பார்கள்.
4. இவர்கள் மனவலிமை குன்றியவர்கள்.
5. எதையும் எதிர்த்து பேசத் துணிவின்றி அடிமையாக நடந்து கொள்வார்கள்.
6. தனது உணர்ச்சிகளையும் விருப்பு வெறுப்புகளையும் வெளிக்காட்ட முடியாமல் உள்ளுக்குள் அடக்கி எப்போதும்சோர்வுடனே கானப்படுவார்கள். இத்தகைய குணம் உடையவர்களுக்கு சென்டாரி நல்ல மருந்து
.வைன் நபர்கள் மற்றவர்களை வேலை வாங்குவார்கள். சென்டாரி நபர்கள் மற்றவர்களுக்காக வேலை செய்வார்கள்.
 
 
5. செராட்டோ - Cerato
"தன்னம்பிக்கை இன்மை, பிறர் ஆலோசனையை எதிர்பார்த்தல்"
இது தன்னம்பிக்கை இல்லாதவர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். மற்றவர்கள் உதவியை நாடாமல் சொந்தமாக ஆலோசிக்கும், முடிவெடுக்கும் திறனை ஊக்குவிக்கும்.
1. தன்னம்பிக்கை இல்லாதவர்கள்
2. எந்த காரியத்திலும் சரிவர முடிவு எடுக்கத் தெரியாதவர்கள்.
3. அப்படியே முடிவெடுத்தாலும் அதில் நம்பிக்கை இல்லாமல் மற்றவர்களிடம் ஆலோசனை கேட்டுக்கொண்டு இருப்பார்கள்.
4. எல்லா விஷயங்களிலும் கேள்வி கேட்டுக்கொண்டேஇருப்பார்கள்.
5. மற்றவர்களின் ஆலோசனையின் படியே காரியங்களை செய்வார்கள். இதனால் தோல்வியும் அடைவார்கள்.
6. தனக்கு எந்த வகை மருத்துவம் தேவை என்பதுகூட தெரியாமல் மற்றவர் ஆலோசனையின்படி மாறிமாறி கடைசியில் தவறான முடிவை எடுப்பார்கள்.
7. எந்த இடத்தில் என்ன பேசவேண்டும் எதைப் பேசவேண்டும் என்று தெரியாதவர்கள்.
8. எடுத்த காரியங்களை சரியாக முடிக்கும் முன்பே அடுத்த காரியங்களில் ஈடுபடுபவர்கள். இத்தகைய குணம் உடையவர்களுக்கு செராட்டோ நல்ல மருந்து.
6. செர்ரி ப்ளம் - Cherry plum
"கோபம், சகிப்புத்தன்மை இன்மை, உணர்ச்சி வசப்படுதல்"
  எதற்கெடுத்தாலும் கோபப்படுதல், உணர்ச்சிவசப்படுதல், சகிப்புத்தன்மை இல்லாமல் இருத்தல், உடலில் ஏற்படும் வலிகள், எரிச்சல் ஆகிய பிரச்சனைகளை போக்கி மனதில் அன்பு, அமைதி, நிதானத்தை ஏற்படுத்தும். தற்கொலை எண்ணத்தை போக்கும். 
1. அதிக கோபம் உணர்சிவசப் படுதல் ஆகியவற்றிற்கு செர்ரி ப்ளம் நன்கு வேலை செய்யும். கோபத்தையும் உணர்சிவசப்படுவதையும் கட்டுப்படுத்தும்.
2. கைகால் வலி, உடல் வலி, காயங்களினால் ஏற்படும் ஏற்படும் வலிகள் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் புலம்பிக்கொண்டே இருப்பவர்களுக்கு இது நல்ல நிவாரணம் தரும். எல்லா வலிகளையும் கட்டுப்படுத்தும்.
3. கோடையில் ஏற்படும் அதிகப்படியான தாகத்தை தணிக்கும்.
4. உணர்ச்சி வசப்பட்டு கண்டபடி கத்துவது, கையில் கிடைத்த பொருள்களை எடுத்து வீசுவது போன்ற குணங்களை கட்டுப்படு
கட்டுப்படுத்தும்.
5. மனைவி குழந்தைகளைஅடித்து துன்புறுத்தி மனநிறைவு கொள்ளும் நபர்களுக்கு இது சிறந்த மருந்து.
6. காபி, புகையிலை பழக்கத்தில் இருந்து விடுபட்ட நினைப்பவர்களுக்கு இது நல்ல பயன்தரும்.
7. கோபம், ஆத்திரம், வெறித்தனமாக எல்லைமீறிய செயலில் ஈடுபடுவதை கட்டுப்படுத்திமனதிற்கு அமைதியைத் தரும்.

 
7. செஸ் நட் பட் - Chest Nut Bud
"ஞாபகமறதி, சோம்பல்"
 இது உடல் சோர்வு மன சோர்வு மற்றும் ஞாபகமறதியை போக்கி உற்சாகத்தையும் சுறுசுறுப்பையும் உண்டாக்கும். எந்த ஒரு செயலையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றலை அதிகரிக்கும்.
1. அதிக சோம்பலும் ஞாபகமறதியும் கொண்டவர்கள்.
2. ஒரு விஷயத்தை கற்றுக்கொள்வதில் அக்கறை காட்ட மாட்டார்கள்.ஊன்றி கவனிக்க மாட்டார்கள்.
3. இவர்களுக்கு ஒரு விஷயத்தை ஒன்றுக்கு இரண்டு முறை சொல்லி புரியவைக்க வேண்டும்.
4. ஒரே தவறை திரும்ப திரும்ப செய்வார்கள். செய்யும் தவறுகளை அன்றே மறந்துவிட்டு மீண்டும் அதே தவற்றை திரும்ப செய்வார்கள்.
5. எடுத்த காரியத்தை முடிக்காமல் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி தப்பிக்கப் பார்ப்பார்கள்.
6. உழைக்காமல் சுலபமான வழியில் அல்லது குறுக்கு வழியில் அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்படுவார்கள்.
7. படிக்கும் பாடங்களை சரியாக புரிந்துகொள்ள முடியாமல் பள்ளிக்கு செல்ல மறுப்பவர்கள். பள்ளிக்கு அல்லது பணிக்கு செல்லாமல் ஊர்சுற்றுபவர்கள்.
 ஹனிசக்கிள் நபர்கள் கடந்தகால தவறுகளை எப்போதும் நினைத்து நினைத்து வருந்துவர். ஆனால் செஸ்ட் நட் பட் நபர்கள் கடந்தகால தவறுகளை மறந்துவிடுவர்.
 
8. சிக்கரி - Chicory
"மற்றவர் கவனிப்பை எதிர்பார்த்தல், பிறர் துணையை நாடுதல்" இது மனதில் தோன்றும் சுயநல எண்ணங்களை போக்கி பொது நலனின் அக்கரை கொள்ளச் செய்கிறது. ஒரு காரியத்தில் பிறர் துணையை நாடும் எண்ணத்தை போக்கி தன்னால் சுயமாக செய்யமுடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
1. எல்லோரும் தன்னை கவனிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். யாரும் தன்னை கவனிக்கவில்லை என்று கவலைப்படுவார்கள்.
2. எப்போதும் மற்றவர் துணையை எதிர்பார்ப்பார்கள்.
3. எங்கேயும் வெளியில் செல்லவேண்டி இருந்தால் நண்பர்கள் அல்லது உறவினர்கள் துணையுடன் செல்வார்கள். தனியாக செல்ல அச்சப்படுவார்கள்.
4. அதிக சுயநலம் கொண்டவர்கள்.
5. மற்றவர்கள் தன்மீது அக்கறை உள்ளவர்களாக இருக்கவேண்டும் என்பதற்க்காக உடல் நிலை சரியில்லாத நோயாளிபோல் காட்டிக்கொள்வார்கள்.
6. தனிமையை போக்க நாய் பூனை போன்ற பிராணிகளிடம் பழகுவார்கள்.
7. பிறர் பொருளுக்கு ஆசைப்படுபவர்கள், கஞ்சத்தனம் கொண்டவர்கள்.
8. மற்றவர்கள் மீது அதிக அக்கறை உள்ளவர்கள் போல் காட்டிக் கொள்வார்கள்.
9. மற்றவர்கள் விஷயங்களை தெரிந்துகொள்ள ஆர்வம் கொண்டவர்கள். 10. ஒரு செய்தியை மிகைப்படுத்தி கூறும் தன்மையை கொண்டவர்கள்.
 
9. க்ளமெட்டீஸ் - Clematis
"கனவு,கற்பனை, மூர்சையடைதல், சுயநினைவிழத்தல்"
மயக்க நிலை, சுய உணர்வு இல்லாமை இருத்தல், மனதில் தேவையற்ற எண்ணங்கள் தோன்றுதல், செயலில் கவனமின்மை போன்ற சூழலில் கிளமெட்டிஸ் பயன்படும்.
1. இவர்கள் நிகழ்காலத்தில் வாழாமல் எப்போதும் ஆகாய கோட்டை கட்டி வாழ்பவர்கள்.
2. எப்போதும் எதைப்பற்றியேனும் பகல் கனவு கண்டு கொண்டு இருப்பார்கள்.
3. அதிகமாக ஞாபகமறதி இருக்கும்.
4. செய்யும் தொழிலில் ஈடுபாடு இருக்காது.
5. எப்போதும் ஏதாவது சிந்தனையில் இருப்பார்கள்.
5. போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களாக இருப்பார்கள்.
6. கடினமான சிக்கலான வேலைகளை தவிர்ப்பார்கள்.
7. ஆடம்பரமாக பணக்காரராக இருப்பது போல் கற்பனை செய்து மகிழ்வார்கள்.
8.தூக்கத்தை அதிகம் விரும்புவார்கள்.
9. தனக்கு மிகவும் பிரியமானவர்கள் இறந்துவிட்டால் தானும் தற்கொலை செய்துகொள்ளலாமா என்று எண்ணுவார்கள்.
10. தனிமையை விரும்புவார்கள்.
 
10. க்ராப் ஆப்பிள் - Crab Apple
"சுத்தம் விரும்பி, அற்ப விஷயங்களுக்கு முக்கியத்துவம் "
எந்த பொருளை பார்த்தாலும் அருவெருப்புக் கொள்ளுதல் ,எரிச்சலடைதல், மிகவும் சின்னச்சின்ன விஷயங்களுக்கு கவனம் செலுத்தி மனதை வருத்திக் கொள்ளுதல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கும். 
1. சின்ன சின்ன அற்ப விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
2. அசுத்தத்தைக் கண்டால் இவர்களுக்கு பிடிக்காது. வாயையும் மூக்கையும் பொத்திக் கொள்வார்கள்.
3. அசுத்தமான இடங்களுக்கு போவதை தவிர்ப்பார்கள். அருவெருப்பு கொள்வார்கள்.
4. அடிக்கடி வீட்டை சுத்தம் செய்தல், கைகளை அடிக்கடி கழுவிக்கொண்டே இருத்தல் போன்ற காரியங்களில் ஈடுபடுவார்கள்.
5. அடிக்கடி குளிப்பது கழுவிய பொருள்களை மீண்டும் மீண்டும் கழுவுவது.
6. அடுத்தவர்கள் பயன்படுத்திய தொடவோ பயன்படுத்தவோ மாட்டார்கள்.
7. வெளியிடங்களில் ஹோட்டலில் சாப்பிட்ட தயங்குவார்கள்.
 
11. எல்ம் - Elm
"சந்தேகம், கவலை "
 தங்கள் திறமையின் மேல் சந்தேகம் கெள்ளுதல். தனக்கு போதுமான திறமை இல்லை என்ற எண்ணம் அடிக்கடி தோன்றுதல், எந்த செயல்களிலும் ஈடுபட தயக்கம் போன்ற சந்தர்ப்பங்களில் இந்த மருந்து பயன்படுகிறது.
1. தாம் செய்கின்ற செயல்களைப் பற்றி சரியாகத்தான் செய்கின்றோமா என்ற எண்ணத்துடனே செய்வார்கள்.
2. செய்த செயலில் முழு திருப்தி இருக்காது. இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்று எண்ணுவார்கள்.
3. பொறுப்புகள் அதிகமாகும்போது ஐயோ இவற்றை சமாளிக்க முடியுமா என்று திகைத்து போவார்கள்.
4. அரசியல், மருத்துவம், பொதுப்பணியில் இருப்பவர்கள் முடிவுகள் எடுக்க யோசிக்கும்போது இந்த மருந்து கைகொடுக்கும்.
 
12. ஜென்ஷன் - Gentian
"எல்லாவற்றிலும் அவநம்பிக்கை, வாழ்க்கையில் துயரமான சம்பவங்களைமட்டுமே நினைத்தால், வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணமே இருக்காது"
எல்லாவற்றிலும் அவநம்பிக்கை, வாழ்க்கையில் ஏற்பட்ட துயரச் சம்பவங்களை மட்டும் எண்ணி வருந்துதல், மனதில் எப்போதும் எதிர்மறை எண்ணங்களாகவே தோன்றுதல், தோற்றுவிடுவோமோ என்ற சிந்தனை. ஆகிய குணமுடையவர்கள் ஜென்ஷன் எடுத்துக் கொள்ளாலாம். 
1. எப்போதும் முகத்தில் மகிழ்ச்சியே இருக்காது. ஒருவித சோகமாகவே காணப்படுவார்கள்.
2. எதிர்மறையான எண்ணத்துடன் சிந்திப்பார்கள். எதிர்மறையான பேச்சுக்களையே பேசுவார்கள்.
3. எதிலும் நம்பிக்கை இன்றி உற்சாகம் இல்லாமல் காணப்படுவார்கள்.
4. எனக்கு விதித்தது இவ்வளவுதான், நான் நினைத்தது எதுவுமே நடக்காது எல்லாம் என் தலையெழுத்து என்று புலம்புவார்கள்.
5. வெற்றி தோல்வியை சமமாக பாவிக்கும் எண்ணம் இருக்காது. தோற்றுத்தான் போவோம் என்று நினைப்பார்கள்.
இத்தகைய எண்ணம் உடையோர் ஜென்சன் எடுத்துக்கொண்டால் எதிர்மறை எண்ணங்கள் மாறி சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள்.
 
13. கோர்ஸ் - Gorse
"நம்பிக்கையின்மை, விரக்தி"
நம்பிக்கையின்மை ,எவ்வளவு மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும் இனி நம் நோய் குணமடைய போவதில்லை என்று அவநம்பிக்கை கொண்டவர்களுக்கு கோர்ஸ் சிறந்த மருந்து.
 
1.இனி இறந்து விடுவோம் என்று கருதுபவர்கள்.
2. எத்தனையோ டாக்டர்களை பார்த்தாச்சு எல்லாம் வேஸ்ட் என கருதுபவர்களுக்கு இது தன்நம்பிக்கை கொடுக்கும்.
3. நாள்பட்ட நோயால் அவதிப்படுபவர்கள்.(ஆஸ்துமா, நீரிழிவு, இரத்த அழுத்தம் )
4. இந்த மருந்து மட்டும் நம்மை காப்பாத்தவா போகுது என்று எதோ கடமைக்கு மருந்து சாப்பிடுவது. போன்ற அவநம்பிக்கை எண்ணம் உடையோருக்கு இம்மருந்து நம்பிக்கை கொடுக்கும்.
 
14. ஹீதர் - Heather
"அதிக கவலை, மன வேதனை அதை எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு இருப்பார்"
அளவுக்கு அதிகமாக கவலை மற்றும் மனவேதனை கொண்டோர். அதை மற்றவர்களிடம் சொன்னால் மனதில் உள்ள பாரம் குறையும் என கருதுவோர் ஹீதர் எடுத்துக் கொள்ளலாம். 
1. இவர்கள் தங்களுடைய வேதனை, கவலை, வறுமை, நோய் பற்றி எப்போதும் மற்றவர்களிடம் புலம்பிக்கொண்டே இருப்பார்கள்.
2. அப்படி சொல்வதினால் மன பாரம் குறைத்ததாக கருதுவார்கள்.
3. மற்றவர்கள் தமது பேச்சை கவனிக்கிறார்களோ இல்லையோ அதைப்பற்றி கவலையின்றி தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்கள்.
4. மற்றவர்கள் சொல்வதை இவர்கள் கவனிக்க மாட்டார்கள். அக்கறை படவும் மாட்டார்கள்.
5. தனிமையை இவர்கள் விரும்ப மாட்டார்கள்.
6. மற்றவர்கள் கவனத்தை ஈர்க்க எல்லோரிடமும் சகஜமாக தொட்டுப் பேசும் பழக்கம் உடையவர்.
ஊர் சுற்றுவதில் விருப்பம் கொண்டவர்.
7. அறுவை கேஸ் என்று பெயர் பெற்றவர்கள்.
இவர்கள் ஹீதர் சாப்பிட்டால் பேச்சில் அடக்கம் அமைதி உண்டாகும் தன் பணியில் சிறப்பாக ஈடுபடுவர்.
 
15. ஹால்லி - Holly
"பொறாமை, வெறுப்பு, விரோதம், போன்ற எதிர்மறை குணங்களை கொண்டவர்"
 மற்றவர்கள்மீது அதிக பொறாமை, வெறுப்பு, விரோதம் போன்ற எண்ணங்கள் மனதில் தோன்றிக்கொண்டே இருந்தால் அவர்கள் ஹால்லி எடுத்துக் கொள்ளலாம் இதனால் தீய எண்ணங்கள் விலகி நல்ல எண்ணங்கள் தோன்றும்.
1. ஹால்லி தேவையில்லாமல் அதிகமாக உணர்சி வசப்படுபவர்களுக்கான மருந்தாகும்.
2. போட்டி, பொறாமை, சந்தேகங்களால் எப்போதும் மனதில் நிம்மதி இல்லாமல் கடுகடுப்புடன் இருப்பார்கள்.
3. நண்பர்கள், உறவுகளுக்குள் பிரிவினை உண்டாக்குவார்கள்.
4. தேவையற்ற கடுமையான வார்த்தைகளை பேசி அடுத்தவர்களை நிம்மதி இழக்கச் செய்து தானும் நிம்மதி இல்லாமல் இருப்பார்கள்.
5. விட்டுக்கொடுக்கும் தன்மையோ பணிவுடன் நடந்து கொள்ளும் தன்மையோ இவர்களிடம் இருக்காது.
6. எப்போதும் கோபத்தோடும் பொறாமை எண்ணத்துடன் இருப்பதால் உடல் நலன் குன்றி கானப்படுவார்கள்.
இத்தகைய குணமுடையோர் ஹால்லி எடுத்துக்கொண்டால் மனதில் அன்பு பாசம் கருணை சகிப்புத்தன்மை அதிகரித்து எல்லோரிடமும் பிரியமுடன் நடந்தது கொள்வார்கள்.
கணவன் மனைவி சண்டை, மாமியார் மருமகள் சண்டைக்கு இது ஏற்ற மருந்து.
 
16. ஹனிசக்ள் -Honeysuckle
"கடந்த காலத்தை எண்ணி வருந்திக் கொண்டிருந்தால்"
 தினமும் கடந்த காலத்தில் ஏற்ப்பட்ட விருப்பு வெறுப்புகள், சம்பவங்களை எண்ணி எண்ணி வருந்திக் கொண்டிருப்போருக்கு ஹனிசக்ள் ஏற்றது.
1. கடந்த காலத்தில் தவறவிட்ட வாய்ப்புகளை எண்ணி வருந்திக் கொண்டிருப்பர்.
2. நடக்க வேண்டியதை விட்டுவிட்டு கடந்தகால நிறைவேறாத ஆசைகள் கனவுகள் பற்றி பேசி புலம்பிக்கெண்டிருப்பர்.
3. உடன் இருப்பவர்களை மறந்துவிட்டு இறந்து போனவர்களைப் பற்றி கவலைப் படுவார்கள்.
4. சிறுவயதில் நான் ராஜா மாதிரி இருந்தேன் ராணி மாதிரி இருந்தேன் என்று புலம்புவார்கள்.
இப்படிப்பட்டமனிதர்கள் ஹனிசக்ள் எடுத்துக் கொண்டால் கடந்தகால நினைவுகளை துயரங்களை மறந்து நிகழ்காலத்தில் நிம்மதியாக வாழ்வார்கள்.
 
17. ஹார்ன் பீம் -Hornbeam
"சோர்வு, கலைப்பு, மலைப்பு"
தனக்கு போதுமான ஆற்றல் இல்லை என்று கருதி சோம்பேரித் தனமாக இருத்தல், காலையில் எழும்போதே கடும் சோர்வு, ஏதாவது ஊட்டச்சத்து பானம் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று கருதுவோர் ஹார்ன் பீம் எடுத்துக்கொள்ளலாம். 
1. வேலை செய்ய தொடங்கும் முன்பே அய்யோ இதை என்னால் செய்ய முடியுமா என்று மலைத்துப் போவார்கள்.
ஆனால் வேலை செய்ய தொடங்கிவிட்டால் திறம்பட செய்து முடிப்பார்கள்.
2. காலையில் எழும்பொழுதே இந்த வேலையை எப்படி செய்வேனோ என்று ஒரு சோர்வுடன் கானப்படுவார்கள்.
3. இவர்கள் மனதாலும் உடலாலும் சோர்வு மிக்கவராக கானப்படுவார்கள் ஆனால் வேலை செய்ய தொடங்கினால் படபடவென்று உற்சாகத்துடன் செய்து முடிப்பார்கள்.
இவர்களுக்கு ஹார்ன் பீம் கொடுத்தால் எந்த வித சோர்வும் இன்றி உற்சாகமாக வேலை செய்வார்கள் இவர்கள் நல்ல திறமைசாலிகள்.
18. இம்பேஷன்ஸ் - Impatiens
"அவசரம், நிதானம் இன்மை, எரிச்சல்"எரிச்சல் அடைதல், எதிலும் நிதானமின்மை, எல்லாவற்றிலும் அவசரம். எல்லாம் உடனே நடக்க வேண்டும் என்ற மனநிலை கொண்டோர் இம்பேஷன்ஸ் எடுத்துக்கொள்ளலாம். 1. இம்மருந்து பொறுமை இல்லாத எதை எடுத்தாலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று வேலை செய்யும் அவசர காரர்களுக்கு ஏற்ற மருந்து.2. எந்த காரியத்திலும் நிதானம் இல்லாமல் அவசர அவசரமாக தவறான முடிவுகளை எடுப்பார்.3. எப்போதும் பதற்றத்துடன் நிலைகொள்ளாமல் இருப்பார்கள்.4.எந்நேரமும் டென்ஷனாக அடுத்தவர்களை அதட்டிக் கொண்டும் இருப்பார்கள்.5. தங்கள் வேலைகளை தாங்களே செய்து கொள்வார்கள். மற்றவர்கள் உதவியை நாடமாட்டார்கள்.6. இவர்கள் நடை உடை பாவனையில் ஒரு அவசரம் இருக்கும். மற்றவர்களையும் அவசரப் படுத்துவார்கள்.7. வேகமாக பேசுவதும் விரைவாக புரிந்துகொள்ளும் தன்மை உடையவர்கள்.இவர்கள் இம்பேஷன்ஸ் மருந்தை எடுத்துக் கொண்டால் மனதில் பொறுமை நிதானம் ஏற்படும் எடுக்கப்படும் காரியம் எல்லாம் வெற்றி பெரும் . 
19. லார்ச் - Larch
"தன்னம்பிக்கை இன்மை, தோல்வி மனப்பான்மை"தன்னம்பிக்கை சிறிதும் இல்லாமல் எந்த முயற்சியிலும் ஈடுபடாமல்; நமக்கு தோல்விதான் கிட்டும் நமக்கு திறமை போதாது என்று கருதிக் கொண்டிருப்போர் லார்ச் எடுத்துக்கொள்ளலாம். 1. பல திறமைகள் இருந்தும் தன்நம்பிக்கை இல்லாமல் இருப்பாவர்களுக்கு இம்மருந்து கைகொடுக்கும்.2. திறமை இருந்தும் தன்னால் முடியாது என்ற எண்ணத்தால் முன்னுக்கு வராமல் இருப்பவர்கள்.3. பணியை தொடங்கும் முன்பே தோல்வி பயத்தில் பின்வாங்குபவர்.4. ஒரு விஷயத்தை தாங்களே சொல்ல பயந்து கொண்டு நண்பர்களிடம் சொல்லி சொல்லச் சொல்லுவார்கள்.5. சபையில் பேச அஞ்சுவார்கள். தடுமாறுவார்கள்.இத்தகைய குணமுள்ளோர் லார்ச் எடுத்துக் கொண்டால் எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். தைரியம் பிறக்கும்.நேர்முகத் தேர்வுகளில் பங்குகொள்ள இது மிகவும் உதவும். 
20. மிமுலஸ் - Mimulus
"பயம்"
 தெளிவாக தெரிந்த காரணங்களினால் ஏற்படும் பயம் அதை வெளியே சொல்ல வெட்கப்படுதல் இத்தகைய மனப்போக்கு உடையோர் மிமுலஸ் எடுத்துக்கொள்ளலாம்
1. குறிப்பிட்ட காரணத்தை சொல்ல முடிகின்ற பயம்.
2. மேடையில் பேச பயம், நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள பயம், தனியாக வெளியூர்களுக்கு செல்ல பயம்,
நாய், பூனை, கரப்பான் பூச்சியை கண்டு பயம்.
3. பரிட்சை எழுத பயம், ஆசிரியர் அடித்துவிடுவாரோ என்று மாணவர்களுக்கு ஏற்படும் பயம்.
இப்படி சொல்லத் தெரிந்த பயங்களுகு மிமுலஸ் நல்ல மருந்து. இது இவ்வித பயங்களை போக்கி தைரியத்தை தன்னம்பிக்கையை கொடுக்கும்
மாணவர்களுக்கு பெண்களுக்கு இம் மருந்து அதிகம் பயன்படும்.
 
21. மஸ்டர்டு Mustard
"காரணம் இல்லாத கவலை, சோர்வு"
 காரணம் ஏதும் இன்றியே சிலர் எப்போதும் கவலைப் பட்டுக்கொண்டே இருப்பர் அதனால் சோர்வாகவும், உடல்நலக் குறைவாகவும், வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இல்லாமல் காணப்படுவர் .மஸ்டர்டு அவர்களுக்கு ஏற்ற மருந்து.
1. இவர்கள் எதற்காக கவலைப் படுகிறோம் என்று தெரியாமல் கவலைப் படுவார்கள்.
2. என்னமோ தெரியலை மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்பார்கள்.
3. மற்றவர்களுடன் சகஜமாக பேசி பழக மாட்டார்கள். எப்போதும் எதையயோ பரிகொடுத்த மாதிரி ஊம் மென்று இருப்பார்கள்.
4. ஏதோ நடக்கக்கூடாதது நடந்துவிட்டது போல் அவர்களை அறியாமலேயே கண்ணீர் வடிப்பர்.
5. மகிழ்ச்சியான சூழ்நிலையை கூட துயரமான சூழ்நிலையாக மாற்றிவிடுவர்.
இவர்கள் இம் மருந்தை எடுத்துக் கொண்டால் தேவையற்ற கவலைகள் நீங்கி மகிழ்ச்சியான மனநிலை உருவாகும்.
22. ஓக் - Oak
"விடா முயற்சி, அதீத நம்பிக்கை"
 செய்ய முடியாது என்று தெரிந்தும் விடாமல் தன் தகுதிக்கு மீறீய ஒரு காரியத்தில் இறங்கி தன் உடலையும் மனதையும் வருத்திக்கொண்டு கஷ்டப்படுவார்கள்.தோல்வி மீது தோல்வி வந்தாலும் விடாமல் அதே காரியத்தில் ஈடுபடுவார்கள் அத்தகைய பிடிவாதக் காரர்களுக்கு ஓக் ஏற்ற மருந்து
1. இவர்கள் ஒரு காரியத்தை எடுத்தால் வெற்றி அடையும் வரையில் விட மாட்டார்கள். தோல்வி ஏற்படும் நஷ்டம் ஏற்படும் என்று தெரிந்தால் கூட எப்படியாவது வெற்றி அடையவேண்டும் என்று தன்நம்பிக்கையுடன் செயல்படுவார்.
2. முடியாது! நடக்காது! என்ற பேச்சுக்கே இடம்தர மாட்டார்கள். துணிந்து செயல் படுவார்கள்.
3. சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அளவுக்கு அதிகமாக உழைத்து உடம்பை வருத்திக் கொள்வர்.
4. இம்மருந்து அனாவசியமான வேலைகளில் ஈடுபடுவதை தடுக்கிறது.வாழ்க்கையில் ஏற்படும் தேவையற்ற சிரமங்களை குறைக்கிறது.
23. ஆலிவ் - Olive
"சோர்வு, களைப்பு"
 இனிமேல் முயற்ச்சி செய்ய சக்தி இல்லை என்று கருதி உடலாலும் உள்ளத்தாலும் வலிமையற்று தளர்ந்துபோய் கிடப்பவர்களுக்கு ஏற்ற மருந்து.
1. சிறிதுநேரம் வேலை செய்தாலும் களைத்து விடுபவர்களுக்கு இம்மருந்து பயன்படுகிறது.
2. இவர்கள்எடுத்த பணியை உடனே முடிக்க முடியாது. இடையிடையே ஓய்வெடுத்து பணிகளை செய்வர்.
3. உடல் பலகீனம் கொண்டவர்.
4. மாணவர்கள், வீட்டில் கடுமையாக உழைக்கும் பெண்கள், உடற்பயிற்சி செய்வோர், நீண்ட நேரம் உழைப்பவர்கள்
ஆகியோருக்கு இம்மருந்து நல்ல பலன் தரும்.
24. பைன் - Pine
"தாழ்வு மனப்பான்மை, குற்ற உணர்வு"
காரணமின்றி ஏதோ குற்ற உணர்வால் தம்மைத்தாமே தாழ்த்திக்கொண்டும் கடிந்துகொண்டும் மனதளவிலும் உடலளவிலும் நிம்மதியின்றி காணப்படுவார்கள் .பைன் இவர்களுக்கு ஏற்றது.
1. இவர்கள் எந்த வேலை செய்தாலும் அதில் முழு திருப்தி இருக்காது இன்னும் நன்றாக செய்திருக்கலாம் என்று வருத்தம் இருந்து கொண்டே இருக்கும்.
2. மற்றவர்கள் செய்த குற்றம் குறைகளை தாம் செய்த குற்றமாக தன் மேல் பழிபோட்டுக் கொள்வர்.
3. மனசாட்சிக்கு பயந்து நடப்பவர்கள்.
4. எப்போதும் நான் அதிஷ்டம் இல்லாதவன் எதற்கும் லாயக்கு இல்லாதவன் என்று புலம்புவார்கள்.
5. சண்டை சச்சரவுகளை விரும்பாதவர்கள். மிகவும் விசுவாசமாக நடந்து கொள்வார்கள்.
7. எப்போதும் ஏதாவது குற்ற உணர்வுடன் இருப்பார்கள்.
பைன் குணம் உள்ளவர்கள் வில்லோவின் குணத்திற்கு எதிர்மறையாக நடந்து கொள்வார்கள்.
25. ரெட் செஸ்ட் நட் - Red Chest Nut
"மற்றவர்களைப் பற்றிய கவலை, பயம்"
காரணமின்றி உறவினர்,நண்பர்களுக்கு அல்லது தாம் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு ஏதாவது ஆபத்து  நேர்ந்துவிடுமோ என்ற கவலையில் முழ்கிக் கிடப்பவர்களுக்க்கு
1. பிறர் நலனில் தேவைக்கு அதிகமாக அக்கறை கொள்வார்கள். அவர்களுக்கு ஏதாவது நடந்துவிடுமோ என்று பயப்படுவார்கள்.
2. வேண்டியவர்கள் யாராவது வெளியூர் சென்றால் அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு விசாரித்துக்கொண்டே இருப்பார்கள்.
3. மனதில் எதிர்மறையான சிந்தனையே ஓடிக்கொண்டிருக்கும்.
4. சுயநலம் இன்றி பிறர் நலனில் அக்கறை கொண்டவர்.
26. ராக் ரோஸ் - Rock Rose
"திகில், பீதி"
 அச்சம், பயம், பதற்றம் போன்ற காரணங்களால் உணர்வற்று கிடப்பவர்களுக்கு ராக் ரோஸ்.
1. உடைகளில் தீ பற்றிக்கொண்டாலோ,ஏதாவது விபத்து நடந்தாலோ, நண்பர்கள் இறப்பு செய்தியை கேட்டாலோ இந்த மாதிரி சம்பவங்களில் மிகவும் பயங்கரமாக பீதி அதிர்ச்சி அடைவர். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு படுத்த படுக்கை ஆகிவிடுவர்.
2. ஏதாவது விபத்தை நேரடியாக பார்த்தால் அதிர்ச்சியில்மயங்கி விழுந்து விடுவார்கள்.
அப்போது ராக் ரோஸ் இரண்டொரு துளி கொடுத்தால் உடனே மயக்கம் தெளியும்.
3. யாராவது பயமுறுத்தினாலோ, இரத்தத்தை பார்த்தாலோ பேரதிர்ச்சிக்கு உள்ளாவர்.
இவர்களுக்கு இம்மருந்து நல்ல பலன் கொடுக்கும்.
27. ராக் வாட்டர் - Rock Water
"கொள்கை வாதிகள், பிடிவாதக்காரர்கள்"
 எதற்கும் விட்டுக்கொடுக்காமல் பிடிவாதம் பிடிக்கும் பிடிவாதக் காரர்களுக்கு இது ஏற்ற மருந்து
1. இவர்கள் சிறந்த கொள்கை வாதிகளாக இருப்பார்கள். எதற்காகவும் தனது கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். தனது கொள்கையை அடுத்தவர்கள் மீது தினிக்கவும் மாட்டார்கள்.
2. இவர்கள் சுயநலம் இல்லாது சமுதாய நலனில் அக்கறை உள்ளவர்கள்.
3. எளிமையாகவும் பிறருக்கு எடுத்துக்காட்டாக விளங்கவேண்டும் என்று கருதுபவர்கள்.
4. மிகவும் பிடிவாத காரர்கள்.
5. பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இது நல்ல மருந்து.
28. ஸ்க்ளெராந்தஸ் - Seleranthus
"உறுதியற்ற தன்மை, சந்தேகம், குழப்பம், சோம்பேரித்தனம்"
ஒரு செயலில் தகுந்த முடிவெடுக்கத் தெரியாமல் குழம்புதல், உறுதியில்லாமல் தள்ளிப்போடுதல் ஆகிய குணமுடையோர்
1. இதைச் செய்வதா அதைச் செய்வதா என்று முடிவு எடுக்க முடியாமல் குழம்பிக் கொண்டிருப்பார்.
2. சோம்பேறித்தனம் கொண்டவர்கள். பிறகு பார்த்துக் கொள்வோம், நாளை செய்து கொள்வோம் என்று ஒத்திப் போடும் தன்மை கொண்டவர்கள்.
3. திடமான ஒரு முடிவை எடுக்க முடியாமல் எண்ணத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
4. வேலைகளை சேர்த்து வைத்துக்கொண்டே போய் கடைசியில் எதைச் செய்வது எப்படிச் செய்வது என தடுமாறுவர்.
"ஆற்றில் ஒரு கால்! சேற்றில் ஒரு கால்!"
என்னும் பழமொழி இவர்களுக்கு பொருந்தும்.
5. கடைகளுக்கு சென்றால் வீட்டைப் பூட்டினோமா!? சுவிட்ச் ஆப் செய்தோமா! என்ற குழப்பத்தில் இருப்பர்.
6. பள்ளி மாணவர்கள் அன்றைய பாடங்களை அன்றே படித்து முடிக்க இது உதவும்.
29. ஸ்டார் ஆப் பெத்லகேம் - Star of Bethlehem
"அதிர்ச்சி, உடல் நலக்குறைவு"
 அதிர்ச்சியின் காரனமாக உள்த்தால் உடம்பால் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்போர்.
1. விபத்தில் அல்லது அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டு மயக்க நிலையில் இருப்பாவர்களை உடனே மயக்கம் தெளியச் செய்கிறது.
2. காதல் தோல்வி, வியாபார நஷ்டம், தேர்வில் தோல்வி போன்றவற்றால் பாதிக்கப்பட்டு நோய்வாய்பட்டு கிடப்பவர்களை இது குணப்படுத்துகிறது.
3. பலகீனமான மனம் கொண்டவர்களுக்கு இம்மருந்து பெரிதும் உதவும்.
4. சிறுவயதில் ஏற்ப்பட்ட அதிர்ச்சியினால் ஏற்ப்பட்ட பாதிப்புகள்.
5. பழைய விரும்பத்தகாத சம்பவங்களை நினைத்து பயப்படுதல்.
30. ஸ்வீட் செஸ்ட் நட் - Sweet Chest Nut
"அளவுக்கு மீறிய துன்பம், நம்பிக்கை அற்ற நிலை"அளவுக்கு மீறிய துன்பத்தாலும் அவநம்பிக்கையாலும் தளர்ந்து தனிமையில் இருத்தல் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் கொண்டவர்களுக்கு இது ஏற்ற மருந்து. 1. பல வருடங்களாக துன்பத்தை அனுபவித்து மனம் ஒடிந்து விட்ட நிலை2. தனிமையில் முடங்கிக் கிடத்தல்3. எல்லோரும் கைவிட்டு விட்டார்கள் என்ற மனப்போக்கு.4. இனி கடவுள்தான் நமக்கு துணை என்று ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொள்ளுதல்.5. இனி நமக்கு எதிர்காலம் என்று ஒன்று இல்லை என்று எண்ணி மிகுந்த துன்பம் வேதனை அடைபவர்கள்.இது மனச்சோர்வு, நம்பிக்கை இழந்த நிலை கவலையை போன்றவை ஏற்கப்படாமல் பாதுகாக்கும்.31. வெர்வைன் - Vervaine
"பேரார்வம், அதிக உழைப்பு, சக்திக்கு மீறிய செயல்"
கடுமையான உழைப்பால் மன அழுத்தம் மற்றும் மன இருக்கமாகவும் சோர்வாகவும் காணப்படுபவர்களுக்கு 
1. அளவிற்கு அதிகமாக உழைப்பவர்கள்.
2. எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்வது. நேரம் போதவில்லை என்று புலம்புவது.
3. மற்றவர்களைவிட தமக்கு அதிகம் தெரிந்திருக்க வேண்டும் என்று விரும்புவது.
4. எதற்கெடுத்தாலும் நேரம் இல்லை நேரம் இல்லை என்ற வார்த்தையை பிரயோகிப்பது.
5. பயனை எதிர்பாராமல் திறமையாக பணிகளை செய்து முடிப்பது.
32. வைன் - Vine
"அதிகாரம், ஆணவம், ஆதிக்கம்"
எதற்கும் விட்டுக்கொடுத்து போகாமல் அதிகாரம் செசெய்துகொண்டு சண்டையிட்டுக் கொண்டும் இருப்பவர்கள்
1. எப்போதும் எல்லோரையும் அதிகாரம் செய்து கொண்டே இருப்பார்கள்.
2. வீட்டில் கணவன் மனைவி குழந்தைகளை அதட்டிக் கொண்டும் மிரட்டிக் கொண்டும் இருப்பார்கள்.
3. தமக்கு கீழே வேலை செய்பவர்களை துச்சமாக மதிப்பார்கள்.
4. மற்றவர்கள் தன்னை புகழ்ந்து கொண்டே இருக்கவேண்டும் என நினைப்பார்கள்.
5. இவர்கள் பேச்சுக்கு மறு பேச்சு பேசினால் கோபம் கொள்வார்கள்.
இவர்களுக்கு வைன் கொடுக்கப் பட்டால் மற்றவர்களிடம் அன்புடனும் அனுசரனையுடனும் நடந்தது கொள்வார்கள்.
33. வால்நட் - Walnut
"தீய பழக்க வழக்கங்கள்"
  டீ, காபி, புகைபிடித்தல்,மது போன்ற கெட்ட பழக்கங்களில் இருந்து விடுபட நினைப்பவர்கள், தட்பவெட்ப நிலை மாறுபாடு மற்றும் இடமாற்றத்தால் பாதிப்புக்கு உள்ளானவர்கள்.
1. டீ, காபி, புகைபிடித்தல்,மது போன்ற கெட்ட பழக்கங்களில் இருந்து விடுபட்ட வால்நட் எடுத்துக் கொள்ளலாம்.
2. பல ஆண்டுகளாக மது புகையிலை பயன்படுத்தினாலும் வால்நட் எடுத்துக்கொண்டால் அதிலிருந்து விடுபடலாம்.
3. குழந்தைகள் பால் குடி மறக்க, கை சூப்பும் பழக்கத்தை மறக்க.
4. புதிய இடங்களில் குடிபுகுதல், புதிதாக பணிக்கு செல்வோர். பள்ளி கல்லூரி மாற்றிச் செல்வோர் அந்த புதிய இடங்களில் இயல்பாக பழக வால்நட் எடுத்துக் கொள்ளலாம்.
5. புதிதாக பூனை நாய் கிளி போன்ற செல்லப் பிராணிகள் வாங்குவோர் அதற்கு வால்நட் குடுத்தால் இடத்திற்கு தக்கவாறு இயல்பாக பழகும்.
34. வாட்டர் வைலெட் - Water Violet
"கர்வம், தனிமை"
1. இவர்கள் தனியாக ஏதாவது செய்துகொண்டு இருப்பார்கள். மற்றவர்கள் விஷயங்களில் தலையிட மாட்டார்கள். மற்றவர்கள் இவர்கள் விஷயத்தில் தலையிடுவதை விரும்பமாட்டார்கள்.
2. இவர்களுக்கு சும்மா இருக்க பிடிக்காது. எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள்.
3. உடல் நலக்குறைவு ஏற்ப்பட்டாலும் சரியான சிகிச்சை எடுக்க மாட்டார்கள். தானாகவே சரியாகிவிடும் என்று இருந்து விடுவார்கள்.
4. இவர்கள் தனிமை விரும்பி. மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கியே இருப்பார்கள்.
5. மனதை ஒரு நிலைப்படுத்தி கவனமாக செயல்படுவார்கள்.
35. ஒயிட் செஸ்ட் நட் - White Chest Nut
தேவையற்ற எண்ணங்கள், வாக்குவாதம்"
தேவையற்ற சிந்தனைகளாலும் எண்ணங்களாலும் மனதலவில் நிம்மதியற்ற நிலையில் இருப்பவர்கள். 
1. ஒரே செயலை திரும்ப திரும்ப செய்து கொண்டே இருப்பார்கள்.
2. தேவையற்ற சிந்தனைகளை சிந்தித்து சிந்தித்து மனதை வருத்திக் கொள்வார்கள்.
3. மனதை ஒருநிலைப் படுத்த முடியாமல் அவதிப்படுவர்.
4. பேய் பிசாசு போன்றவற்றில் நம்பிக்கை உடையவர்.
5. எங்காவது வெளியே சென்றால் தேவையில்லாமல் அங்கே உள்ள மரங்களை எண்ணிப் பார்பது மாதிரி செயல்களில் ஈடுபடுவர்.
6. தேவையில்லாத விஷயங்களை மனதில் இருந்து அகற்ற முடியாமல், இரவில் தூக்கம் இன்றி தவிப்பர்.
இவர்கள் ஒயிட் செஸ்ட் நட் எடுத்துக் கொண்டால் மனதில் தேவையற்ற சிந்தனைகள் தோன்றாது. மனம் ஒருநிலைபடும்.
36. வைல்ட் ஒட் - Wild oat
"நிலையில்லாமை,தடுமாற்றம், திருப்பதி இன்மை"
தமது செயல்களில் பற்றோ உறுதியோ இல்லாமல் இருத்தல் அடிக்கடி மனதை மாற்றிக்கொண்டே இருப்பவர்கள்
1.இவர்களுக்கு தனக்கு எது சரியான வழி என்று தீர்மானம் செய்ய தெரியாது.
2. செய்யும் வேலைகளை திறம்பட செய்வார்கள். ஆனால் ஒரே வேலையில் தொடர்ந்து இருக்க மாட்டார்கள்.
3. நல்ல லாபம் ஈட்டும் தொழிலாக இருந்தாலும் தன் வியாபாரத்தையும் தொழிலையும் மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
இவர்கள் வைலெட் ஒட் எடுத்துக் கொண்டால் எது சரியான வழி என குழப்பம் இல்லாமல் தீர்மானம் செய்ய முடியும்.
ஒரு தொழிலில் பற்றுடன் நிலையாக ஈடுபட முடியும்.
37. வைல்ட் ரோஸ் - Wild Rose
"எதிலும் அக்கறை இன்மை"
எந்த செயலிலும் அக்கரையோ ஆர்வமோ பற்றோ இல்லாமல் வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் வாழ்பவர்கள்
1. இவர்களை தன் வேதனையை துயரத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். தன் மனதிற்குள் வைத்தே பூட்டிக் கொள்வார்கள்.
2. தன் உடல் நலன் பற்றியோ ஆரோக்கியம் பற்றியோ கவலைப்பட மாட்டார்கள். வந்தா வருது போ என்பார்கள்.
3. வாழ்க்கையில் எந்த பிடிப்பும் லட்சியம் இல்லாமல் வாழ்வார்கள்.
4. எப்போதும் சுறுசுறுப்பு இன்றி சோர்வாக இருப்பார்கள்.
5. கையில் பணம் கிடைத்தால் தாம் தூம் என்று செலவு செய்வார்கள்.
6. எல்லாம் என் தலைவிதி,
வெந்ததை தின்னுட்டு விதிவந்தா சாவோம்,
என்ற சிந்தனையோடு வாழ்வார்கள்.
இத்தகைய போக்கு கொண்டோர்கு வைல்ட் ரோஸ் கொடுத்தால் வாழ்க்கையில் ஒரு நல்ல பிடிப்பு ஏற்படும். உற்சாகம் சுறுசுறுப்போடு செயல்படுவர்.
38. வில்லோ - Willow
"பிறர்மேல் குற்றம் சாட்டுதல்"தனது குறை நிரைகளை உணராமல் எல்லாவற்றிற்கும் பிறர்மீது குற்றம் சுமத்தும் மனம் கொண்டவர்கள்1. இவர்கள் தனக்கு வரும் துன்பம் அனைத்திற்கும் மற்றவர்களையே குற்றம் சாட்டுவர்.2. தானும் மகிழ்ச்சியாய் இருக்க மாட்டார் மற்றவர்கள் மகிழ்ச்சியாய் இருந்தால் இவருக்கு பிடிக்காது.3. எப்போதும் மற்றவர்கள் உதவியை எதிர்பார்ப்பார்.4. எப்போதும் கடுகடுவென்று முகத்தை வைத்திருப்பர். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்காது.5. மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவார்.6. நேர்மை நியாயத்திற்கு கட்டுப்பட மாட்டார்கள்.இத்தகைய குணம் உடையவர்களுக்கு வில்லோ ஏற்ற மருந்து. 
39. ரெஸ்க்யூ ரெமடி - Rescue Remedy 
        பாச் மலர் மருத்துவத்தில் மொத்தம் முப்பத்தி எட்டு மருந்துகள் உள்ளன என்று பார்த்தோம். இந்த முப்பத்தி எட்டிலிருந்து தேர்ந்தெடுத்த ஐந்து மருந்துகளின் கலவை தான் ரெஸ்க்யூ ரெமடியாகும்.(Rescue Remedy)இதனை சுருக்கமாக RR என்று அழைப்பார்கள். அவை 1. செர்ரிப்ளம், 2. க்ளமாட்டிஸ் 3. இம்பேஷன்ஸ் 4. ராக்ரோஸ் 5. ஸ்டார் ஆப் பெத்லகேம்.இதையும் சேர்த்து மொத்தம் முப்பத்தி ஒன்பது மலர் மருந்துகள் உள்ளன. அவசர நேரங்களில் இந்த மருந்து முதலுதவியாக செயல்பட்டு பல நேரங்களில் உயிர் காப்பாற்றும் அளவிற்கு பயன்படும். விபத்து, விஷக்கடி, நெருப்பு காயம், விபத்தினால் ஏற்படும் அதிக இரத்தப் போக்கு, அதிர்ச்சி, அதீதமான பயம், மயக்கம், கோமா என்று எந்த விதமான அவசர நேரமாக இருந்தாலும் முதலுதவியாக அநேகமாக இந்த மருந்து பயன்படும்.ரெஸ்க்யூ ரெமடி பல நேரங்களில் உயிரைக்கூட காக்க கூடிய ஆற்றல் கொண்ட மருந்தாகும். சாதாரணமாக அவசர நேரம் அல்லது விபத்தின் பொழுது பாதிக்கப்பட்டவரின் மனநிலை அநேகமாக கீழே கொடுத்துள்ள ஐந்து விதமாக இருக்கும்.இந்த ஐந்து விதமான மனநிலைக்கு ஏற்றபடி, (ரெஸ்க்யூ ரெமடி)விபத்து நடந்த உடனே இந்த மருந்து கொடுத்தால், சில நிமிடங்களில் இரத்தப் போக்கு கட்டுக்குள் வந்து, வலியும் குறைந்து, பாதிக்கப்பட்டவர் அதிர்ச்சியிலிருந்து மீண்டு, பதட்டம் குறைந்து மயக்கம் தெளியும் பொழுது டாக்டரிடம் செல்வதற்கு முன்பே அநேகமாக முழுமையாக நிவாரணம் பெற்று விடுவார்.ரெஸ்க்யூ ரெமடி எப்பொழுதும் கைவசம் இருக்க வேண்டிய மருந்தாகும். பல நேரங்களில் இந்த மருந்து கொடுத்தவுடன் வேறு மருத்துவ உதவி இல்லாமலே பாதிக்கப்பட்டவர், சில நிமிடங்களில் எழுந்து நடந்து செல்வதை காணலாம். மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தால், சரியான மருத்துவ உதவி கிடைக்கும் வரை இந்த மருந்து மூலமாக பாதிக்கப் பட்டவரின் உயிரை காப்பாற்றலாம்.| மருந்து | மனநிலை | 
| செர்ரிப்ளம் | தாங்கமுடியாத வலி, அதிக உணர்சிவசப்படுதல் | 
| க்ளெமாட்டிஸ் | மயக்கம், சுயநினைவு இழத்தல் | 
| இம்பேஷன்ஸ் | பதற்றம், எரிச்சல், அவசரம், வலிப்பு, இழுப்பு | 
| ராக்ரோஸ் | பீதி, திகில், பயம் | 
| ஸ்டார் ஆப் பெத்லகேம் | அதிர்ச்சி, படபடப்பு | 
ஒன்றுக்கொன்று எதிர்மறை குணங்கள் கொண்ட சில மருந்துகள்:| 
 | ஒன்றுக்கொன்று எதிர்மறை குணங்கள் கொண்டுள்ள மருந்துகள் | 
 | 
| 
 | 1.         |  தன் தவறுகளுக்கு பிறரை குற்றம் சாட்டுபவர்கள் - வில்லோ | மற்றவர்கள் செய்த குற்றங்களுக்கும் தாம் பொறுப்பேற்றுக் கொள்வார்கள் - சென்டரி | 
 | 
| 
 | 2.         |  மற்றவர்களை அடக்கி ஆள நினைப்பவர்கள் - வைன் | மற்றவர்களிடம் அடங்கி நடப்பவர்கள் - சென்டரி | 
 | 
| 
 | 3.         |  எதிலும் நம்பிக்கை அற்றவர்கள் - கோர்ஸ் | எல்லாவற்றிலும் அதீத நம்பிக்கை கொண்டவர்கள் - ஓக் | 
 | 
| 
 | 4.         |  எப்போதும் எதிர்காலத்தைப் பற்றி கற்பனை செய்துகொண்டு இருப்பவர்கள் - க்ளமெட்டிஸ் | கடந்தகால நினைவுகளை நினைத்து வருந்திக் கொண்டிருத்தல் - ஹனிசக்கிள் | 
 | 
| 
 | 5.         |  தன் கவலை, கஷ்டங்களை மற்றவர்களிடம் கூறாமல் மறைப்பவர்கள் - அக்ரிமோனி | மற்றவர்களிடம் தன் கவலை, கஷ்டங்களை சொல்லி புலம்புதல் - ஹீதர் | 
 | 
| 
 | 6.         |  எல்லாவற்றிலும் விரைவாக செயல்படுவது - இம்பேஸன்ஸ் | காலம் தாள்த்தி செயல்படுவது - கிளந்தராஸ் | 
 | 
| 
 | 7.         |  பிறரிடம் விவாதம் செய்வது - பீச் | விவாதம் செய்வதை தவிர்ப்பது - அக்ரிமனி | 
 | 
| 
 | 8.         |  சுயநலத்துடன் இருப்பது - சிக்கோரி | பிறரது நலனில் அக்கரை கொள்வது -ராக்வாட்டர் | 
 | 
| 
 | 9.         |  தெளிவான பயம் - மிமுலஸ் | தெளிவற்ற பயம் - ஆஸ்பென் | 
 | 
| 
 | 10.     |  எப்போதும் தனிமையை விரும்புவது - வாட்டார் வைலெட் | தனிமையை வெறுப்பவர்கள் - ஈதர் | 
 | 
| 
 | 11.     |  சூழ்நிலைக்கு தக்கவாறு தம்மை மாற்றிக்கொள்வார்கள் - லைல்ட் ரோஸ் | சூழ்நிலைக்கு ஏற்றார்போல் தம்மை மாற்றிக்கொள்ள முடியாமை - வால்நட் | 
 | 
| 
 | 12.     |  எல்லாவற்றிலும் பிறர் அறிவுரையை கேட்டு நடப்பார்கள் - செராட்டோ | பிறருக்கு அறிவுரை செய்துகொண்டு இருப்பவர்கள் - சிக்கரி | 
 | 
| 
 | 13.     |  பிறரது நன்மைகளை கண்டு மகிழ்ச்சி கொள்வார்கள் - லார்ச் | பிறரது நன்மைகளை விருப்பம் இல்லாமை - ஹால்லி | 
 | 
| 
 | 14.     |  தனியாக செயலாற்றும் திறமை கொண்டவர்கள் - வைன் | மற்றவர்களை பின்பற்றி நடப்பது - சென்டரி | 
 | 
| 
 | 15.     |  மன உறுதி கொண்டவர்கள் - வெர்வைன் | உறுதியற்ற உள்ளம் - சென்டரி | 
 | 
| 
 | 16.     |  கனவு கற்பனையில் இருப்பார்கள் - க்ளமெட்டிஸ் | எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்படுவது - வெர்வைன் | 
 | 
| 
 | 17.     |  எதற்கெடுத்தாலும் கோபம் கொள்வது - செரிப்பிளம் | எப்போதும் அமைதியுடன் நடந்துகொள்வது - ஓக் | 
 | 
| 18. |  தான் கண்டிப்புடன் நடந்துகொள்வது - ராக்வாட்டர் | மற்றவர்களிடம் கண்டிப்புடன் நடந்துகொள்வது - வைன் | 
 | 
| 19.    | 
 | தம்மை தாமே வெறுப்பது - கிராப் ஆப்பிள் | மறர்களிடம் வெப்புடன் நடந்துகொள்வது - ஹால்லி | 
| 20.     |  நேர்மை நியாயத்தை கடைபிடிப்பது - வெர்வைன் | நேர்மை தவரி தமக்கு சாதகமாக நடந்துகொள்வது - சிக்கரி | 
 | 
| 21.     |  பிறரது காரியங்களில் தேவையில்லாமல் தலையிடுவது - சிக்கரி | மற்றவர்கள் காரியங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது - வாட்டர் வைலெட் | 
 | 
| 22.     |  அடிக்கடி சோர்வடைந்து உட்கார்ந்து விடுவது - ஆலிவ் | ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டே இருப்பார்கள் - ஓக் | 
 | 
| 
 | 
 | 
 | 
 | 
 | 
 | 
 | 
 | 
For Consultation :